Pages

Monday, May 26, 2014

நரேந்திரா மோடியால் நாட்டை தூக்கி நிறுத்த முடியுமா?

  1.  கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், இந்தியாவின் “கிரெடிட் ரேட்டிங்க்” அதல பாதாளத்துக்கு போய் ஜி-20 நாடுகள் உட்பட எதிலும், நம்மை சல்லிக்காசுக்கு கூட மதிக்காத நிலையில் மோடி பதவி ஏற்கிறார்..

2.--2013-14 ம் ஆண்டு நல்ல விளைச்சல். நல்ல தானிய கொள்முதல் மற்றும் கையிருப்பு அதிகம்..ஆனாலும் விலை வாசி இறங்க வில்லை..காரணம் கிடங்குகளில் தனியங்கள் சரியாக பாதுகாப்பின்றி அழுகி வருகிறது..தேவையான் இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கும் ஏற்பாடில்லை..காரணம் உணவு மந்திரி, “புரோக்கர்களின் கைய்யில்” விலை போன அவலம்..
இந்த சூழலில் மோடி பதவி ஏற்கிறார்..

3.சமூக ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய “உற்பத்தி செக்டார்” (production sector)மாபெரும் வளர்ச்சி பெற வேண்டும்..கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இத்துறை “நெகடிவ் குரோத்” அடைந்துள்ளது..இந்நிலையில் மோதியின் பதவி ஏற்கிறார்..

4.வங்கிகள்--- தொழில் துறைக்கு கடன் கொடுக்க அஞ்சுகின்றன..வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய “என்.பி.ஏ” யும் ஏராளமாக நிலுவையில் உள்ளது..ஒரு வலுவான திறமையான “வங்கித்துறை” ஏற்படுத்த பட வேண்டும்..வங்கிகள் மடிந்த காலம் நரேந்திர மோடியின் பதவிகால தொடக்கமாக உள்ளது..

5.மின் வெட்டில் மூழ்கி இருக்கும் நாடு--மின் தேவை எறாளம்..தயாரிப்பு மிக குறைவு..இதை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் நரேந்திர மோடி--ஆனாலும் மின் மிகை மாநிலமாக குஜராத்தை மாற்றிய அவரது அனுபவம்--இதற்கு கை கொடுக்கும் என்றாலும் இது ஒரு மாபேரும் சவால் என்னும் சூழலில் பதவி ஏற்கிறார்.

6.மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய பொருட்கள்--அதனால் ஏற்படும் மாபெரும் அந்நிய செலாவணி ”டிஃபிசிட்”-இதை சரி செய்யும் சவால் மோடிமுன்..இன்னிலையில் மோடி பதவி ஏற்கிறார்.

7. மின் தேவையை பூர்த்தி செய்ய சூரிய ஒளி மின் உற்பத்தி உட்பட எல்லாவகை மின் உற்பத்தியும் செய்ய வேண்டும்..இவற்றிக்காக அகில இந்திய அளவில் “ சூரிய ஒளி மின் உற்பத்தி இணையம் “ உருவாக்க வேண்டும் என மோடி அவர்கள் பேசி இருக்கிறார் என்பது அவரது ஞானத்திற்கு சான்று என்றாலும் இச்சவாலை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

8அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் “தங்க நாற்கர சாலை” அதை இவர் விரிவு படுத்த வேண்டும்..ரெயில் வே மற்றும் மற்றும் கடல் வழி போக்குவரத்தையும் இணைத்து, “ஒருகிணைந்த பன்முக போக்குவரது துறையை” ஏற்படுத்த வேண்டும்--இச்சவால்களை மோடி எப்படி செய்யபோகிறார்?

8.தனக்கு விசா தராத அமெரிக்காவை அலைய விட்டு சரித்திரம் படைத்த மோடி, மேலை நாடுகளை நம்பாமல், ஜப்பான், சிங்கப்பூர், சீனா மற்றும் இஸ்ரேல் ஆகியவைகளுடன் வியாபாரம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார் என்றாலும் அயல் உறவில், குறிப்பாக இலங்கை பாகிஸ்தானுடன் இவரது உறவு வளருமா வீழுமா? என்ற நிலையில் இவர் பொறுப்பேற்கிறார்..

9.கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவு சிரிப்பாய் சிரித்தது..உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு கை கொட்டி சிரித்தது..ராணுவ வீரர்களின் தலை கொய்தல், அருணச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆகிரமிப்பு, இலங்கை தமிழர்களுக்கு அநீதி, என்ற மிக இக்கட்டான நிலையில் மோடி பதவிஏற்கிறார்.

10.காஷ்மீர் சத்தீஷ்கர், அஸ்ஸாம், என உள்நாட்டுகலவரம், குண்டு வெடிப்பு-- நக்சல் ஆதிக்கம், என்ற இந்த சோதனைகளை --மோடி எப்படி சரி செய்ய போகிறார்?..

11.அத்தனை பேருக்கும் அமைச்சர் பதவி, வழங்கி “இஷ்டத்துக்கு” அமைச்சர் நியமனம் செய்த சோனியாவின் குழப்பங்களை மோடி எப்படி சரி செய்யப்போகிறார்
மோடியால் இச்சோதனைகளை சாதனைகளாக மாற்றமுடியுமா?--மோடி கரை ஏறுவாரா>--முடியுமா மோடியால்?--

எல்லா கேள்விகளுக்கும் பதில் “ மோடியால் முடியும்” என்பது மட்டுமே---அது --ஏன்? எப்படி?

இந்திய வரலாற்றில் 12 ஆண்டுகாலம் ஒருமாநிலத்தின் வெற்றிகரமான முதல்வராக பணியாற்றி.. பிரதமர் பதவியை ஏற்கப்போகும் முதல் மனிதர் நரேந்திர மோடி மட்டும் தான்..

இந்தியா பொன்றே...”பொருளாதார சீரழிவு, வெளியுறவில் சீர்கேடு--உள்நாட்டு பாதுகாப்பில் அச்சுறுத்தல்” என்ற மோசமான சூழலில் ஜப்பானின் பிரதமராக பதவி ஏற்றார் “ சின்ஜி அபே”
தனது திறமையான நிர்வாகத்தால் ஜப்பானை தூக்கி நிறுத்திணார்..ஆனால் அவர் ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்தவர்--அதிகார மையத்தை அனுபவித்தவர்..

ஆனால் நரேந்திர மோடி ஒரு சாதரண குடும்பத்திலிருந்து வந்தவர்..டீ விற்ற்வர்..அதிகார மைய்யம் என்பதை புத்தகத்தில் மட்டுமே படித்தவர்.;;;

செய்வாரா---நரேந்திர மோடி செய்வாரா?---நாட்டை வளர்ச்சிப்பாதையில் ஏற்றுவாரா ?

செய்வார்..ஏனேனில் “அவர் “நிரூபிக்கப்பட்ட வெற்றியாளர்”

ஏற்கனவே ஆட்டத்தை துவங்கிவிட்டார்...சார்க் நாடுகளின் பிரதமர்கள் வருகை--இலங்கை பாகிஸ்தனிலிருந்து இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை என ----”பவுண்டரிகள்” அடிக்க தொடங்கிவிட்டார்..

நிச்சயம் செய்து காட்டுவார்--அன்னை பாரத மாதாவை உலகின் குரு வாக ஆக்கி காட்டுவார்..நம்புவோம்--காத்திருப்போம்... 

Sunday, May 25, 2014

இலங்கை தமிழர்களுக்கு தீர்வுதான் என்ன?


ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்ட கேள்விகளை . உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்..ஏனெனில் நான் ஒரு “கைநாட்டு”--அவ்வளவு ஞானம் இல்லை ..நீங்கள் பதில் சொல்லுங்களேன்..
1.தமிழர்களுக்கு தீர்வுக்காக நாம் இலங்கையுடன் “போர் தொடுக்கலாமா?”--அது முடியுமா?--உலகநாடுகள் பார்த்துக்கொண்டிருக்குமா?--போர் தொடுத்தால் தீர்வு கிடைத்து விடுமா?ஏற்கனவே ராஜீவ் காந்தி அதைத்தானே செய்தார்..
2.தமிழ் நாட்டில் இன்னும் அதிகமாக “ஆர்ப்பாட்டம்--போராட்டம்--கண்டன அறிக்கை”-மனித சங்கிலி --இவைகளை நடத்தினால் ராஜபக்‌ஷே பயந்து “தீர்வு” கொடுத்து விடுவாரா?
3.எதற்கும்--எக்காரணத்திற்கும் --இந்தியாவிற்குள் ராஜபக்‌ஷேவை அழைக்காமல். அனுமதிக்காமல் இருந்தால் தீர்வு உடனடியாக கிடக்குமா?
4.ராஜபக்‌ஷேவிற்கு நெருக்கமாக உள்ள சீனாவையோ--பாகிஸ்தானையோ பார்த்து சமாதான தூது விட்டால் “காரியம்” நிறைவேறுமா?
5.ஐ.நா---மனித உரிமை அமைப்புக்கள்---நவநீதம் பிள்ளை---நார்வே நாடு---இன்னும் சமாதானம் பேசிய பலரை “மேலும் அழுத்தம் “ கொடுத்து மீண்டும் பேசச்சொன்னால் “வேலை ஆகுமா”?
6.இல்லை --டெல்லிக்கு கூப்பிட்டு..”மிரட்டி” அனுப்புதல் சரியா? அப்படி கூப்பிட வேண்டும் என்றால் அவரை இந்தியாவிற்குள் நுழைய விடாமல்--”நடுவானத்தில் வைத்து” பேசலாமா?
மொத்தத்தில் “அழைத்து பேசும் “ராஜதந்திர உக்தியா?”
ஆர்ப்பாட்டம் செய்து நாமும் வீணாய் போய்--தமிழர்களுக்கும் “உதட்டளவு ஆதரவோடு” நிறுத்திக்கொள்வதா?
மோடி இன்னும் “செய்யவே ஆரம்பிக்க வில்லையே?” அதற்குள் கூப்பாடு போடுவது தமிழர்களின் மீது நமக்கு உள்ள அக்கரையை காட்டவா? அல்லது “இரச்சல் மட்டும் போட்டுவிட்டு” உட்கார்ந்துகொள்ளவா?
ராஜபக்‌ஷேவுடன் பேச்சு வார்த்தை ந்டத்தவே முடியாத காங்கிரஸ் அரசைவிட --ராஜபக்‌ஷேவை அழைத்திருப்பதன் மூலம் “மோடி நிச்சயம் “ உருப்படியாக ஏதாவது செய்வார் என்று நான் நினைக்கிறேன் “--என்றார்..
இது சரியா தோழர்களே?

Saturday, May 24, 2014

இது ஒரு செயல் காலம்--மோடியின் திறமைகள் பாயும்..


பாராளுமன்ற மையமண்டபத்தில் பாஜக எம்பிக்கள் மத்தியில் மோடிஜி ஆற்றிய முதல் உரை.....சரித்திர பிரசித்தி பெற்றது..எதிரிகள் நேசிக்கிறார்கள்..துரோகிகள் சிலாகிக்கிறார்கள்..”கட்சிதான் எனது தாய் “ என அவர் கண்கலங்கியது....அப்பப்பா...துவக்கமே தூள்..

பாராளுமன்ற வாயிற்படியில் மோடி தலைவைத்து வணங்கியது...இது உலகை கவர்வதற்காக மோடி செய்ததா?---நேற்றைக்கும் சரி--அதற்கு முந்தைய பலதடவைகளிலும் சரி---மோடியின் பல உரைகளில் “பாராளுமன்றம் நமது கோயில்--அரசமைப்பு சட்டமே நமது கீதை”--என முழங்கி இருக்கிறார்..

அதன் வெளிப்பாடுதான் --உண்மையின் உரைகல்தாந்-மோடிஜியின் பாராளுமன்ற படிகளில் தலைவைத்து வண்ங்கிய காட்சி..

மோடியிம் துவக்க வெற்றியின் 7 படிகள் என் கண்முன்னே நிற்கிறது..

1. பாராளுமன்ற படிகளில் தலைவைத்து வணங்கியது..

2.”அவர்களால் முடிந்த அளவிற்கு செய்தார்கள்” என காங்கிரஸ் ஆட்சியை குற்றஞ்சொல்லாமல் பாராட்டியது..

3. தனது பதவி ஏற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் சமுதாய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது 

4.ஒவ்வொரு அமைச்சகத்தின் “ரிப்போர்ட் கார்டுகளை “ சமர்ப்பிக்க சொன்னது--

5.இதுவரை இந்திய அரசியலில் இல்லாதவகையில் பிரதமரே ஒவ்வொரு துறையினரிடமும்  நேரடியாக விவாதிக்க இருப்பது..

6.ராணுவ அமைச்சகத்தின் முப்படை தளபதிகளை யும் இதே மாதிரி “ரிப்போர்ட் கார்டுகளோடு “ வரசொல்லி இருப்பது..

7.நாம் எல்லோரும் சேர்ந்து செயல்பட இருக்கிறோம்--இதில் ஒவ்வொரு எம்பிக்களுக்கும் பங்கிருக்கிறது”--என அனவர்களிடத்திலும் “ accountability" யை புகுத்தியது..

ஆக--துவக்கமே தூள்---”நல்ல துவக்கம் பாதி முடித்தமைக்கு சமம்”--என்ற ஆங்கில பழமொழிக்கு அர்த்தம் இப்போது புரிந்திருக்கும்...

போக போக தெரியும்--இந்த பூவின் வாசம் புரியும்----

இது அந்தகால பாட்டு---

இப்போதே புரிகிறது--நல்ல எதிர்காலம் தெரிகிறது--

இது மோடி செயலகளை --பார்த்து.....

Wednesday, May 21, 2014

கோபாலகிருஷ்ணன் காந்திக்கு ஒரு மனம் நிறைந்த பதில்


"தி இந்து" .. அவசரம் அவசரமாக வாங்கி வெளியிட்ட உங்கள் (திரு.கோபாலகிருஷ்ணன் காந்தியின் )----மனம் திறந்த மடல்..படித்தேன்..
தனது ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிப்புகளில் இக்கடிதத்தை வெளியிட்டு “இந்து” நரேந்திர மோடி மீதிருந்த தனது “துவேஷத்தை” உங்கள் மூலம்வெளிப்படுத்திக்கொண்டது..

பிரதமருக்காக தனது ஆதரவை ஏகோபித்த அளவில் தெரிவித்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல்..கொஞ்சம் காலம் கூட பொறுத்திருந்து பார்க்காமல் ”இந்து” தனது வக்கிரத்தை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது எதிர்பார்த்ததுதான்.

இறுதியாக மோடி வெற்றிவாகை சூடிவிட்டார்..

இந்தியாவிலுள்ள “அறிவு ஜீவிகள்” அத்தனை பேரும் தங்களுக்கு தெரிந்த “பித்தகோரஸ்” தியரத்திலிருந்து, “பித்துபிடித்த” தியரங்கள் வரை, அத்தனையும் கூட்டி கழித்து போட்டு பார்த்து “ மோடி வரமுடியாது..ஜெயிக்க முடியாது....ஜெயித்தாலும் பிரதமராக முடியாது”..’..என்ற வெளியிட்ட அத்தனை கணக்குகளும் பொய்த்து போய்விட்டபடியால், இப்போது “திறந்த மடல்கள் “ எழுத துவங்கியுள்ளனர்..அதன் வெளிப்பாடுதான் கோ.காந்தியின் நரேந்திர மோடிக்கான திறந்த மடலை இந்து வெளியிட்டதின் மர்மம்.

இனி விஷயத்துக்கு வருகிறேன்..

காந்தி குடும்பத்திலிருந்து வந்திருந்த படியாலும், பாட்டன் சம்பாதித்த நற்பெயரை பேரன் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையிலும், கடிதத்தை படிக்க ஆரம்பித்தால், ....கொஞ்சம்நாள் ஆம் ஆத்மிக்கு போய் வந்ததே இவ்வளவு “ஆழ் மனது வக்கிரங்களை” உங்களுக்குள் ஏற்படுத்தி இருப்பது உங்கள் எழுத்தில் வெளிப்படையாக தெரிந்தது.

“இப்போது அடைந்திருக்கும், உச்சபட்ச பதவியில், உங்களை காண விரும்பியவர்களில், ஒருவனல்ல நான்”

“நீங்கள் பிரதமராவது குறித்து கோடிக்கணக்கானோர் பரசவப்படுவது போல, கோடிக்கணக்கானோர் வருத்தமுற்றிருக்க கூடும்”

மோடி பிரதமராவதை விரும்பாத கோஷ்டியை சேர்ந்தவர் நீங்கள் என்பதும், ஒருசில.. வருத்தப்படும் வயதானவர்களில் நீங்களும் ஒருவர்  என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டது..பின் ஏன் இக் கடிதம் எழுத வேண்டும்?
 எதிர்ப்பாளர்களிடமிருந்து “அட்வைஸ்” ஏன் வேண்டும்? நீங்கள்தான் என்ன நன்மைகள் செய்தாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையே..

என்னுடைய விமர்சனத்தில் “ஆழ்மனது வக்கிரம்” என்று குறிப்பட்டது மேலே சொன்ன உங்கள் வார்த்தைகளிலிருந்து உண்மை என்பது தெளிவாகிறது அல்லவா?

” 31 சத ஓட்டுக்கள் மட்டும் பெற்ற நீங்கள் எப்படி தேசத்தின் ரக்‌ஷகன் ஆவீர்கள்?..69 சதம் உங்களுக்கு எதிர்ப்புத்தானே ” என்ற உங்கள் வரிகள், 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரசும் 40 சதவீதத்திற்கும் குரைவான ஓட்டுக்களை பெற்றே நாட்டை ஆண்டது –60திலிருந்து 70 சதவீத மக்கள் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள் ----என்பதை நீங்கள் ஏற்க மறுக்கிறிர்கள் என்பது புரிந்தது--.

நாம் “வெஸ்ட் மினிஸ்டர் “ மாடல் பார்லிமெண்டரி ஜனநாயகத்தை பின் பற்றுவது உங்களுக்கு தெரியாததா? அதிக ஓட்டுவாங்கியவரின் ஓட்டு சதத்தை மொத்தஓட்டில் கழித்து, ”எதிர்ப்பு ஓட்டு என்று கருணாநிதி போடும் கணக்கை” போன்ற உங்களின் வாதம் ”தோல்வியை ஒத்துக்கொள்ள மறுக்கும் உங்களின்  மனம் ”என எடுத்துக்கொள்ளலாமா?

“சிறுபான்மையினர் தொடர்பாக அரசமைப்பு சட்டம் கொண்டிருக்கும் லட்சியத்தை உங்கள் நோக்கத்திற்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்கவோ நீர்த்துப்போகவோ செய்யாமல், அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் மோடி அவர்களே”—-----என்ற உங்கள் கோரிக்கை காங்கிரசுக்கும் பொருந்தும் அல்லவா. ? 

தாழ்த்தபட்டோருக்காக மட்டுமே அண்னல் அம்பேத்காரும் உங்கள் தாத்தாவும் பெற்றுத்தந்த சலுகைகளை மதம் மாறிய கிற்ஸ்தவர்களுக்கும் தாரை வார்த்ததை நீங்கள் ஏண் தட்டிக்கேட்க வில்லை என நாங்கள் கேட்கலாமா? 

தாழ்த்தபட்டவருக்காக மோடியை குரல் கொடுக்கச்சொல்ல உங்களுக்கு “தார்மீக உரிமை இல்லை என்பதை நீங்கள் ஏன் நினைத்துப்பார்க்கவில்லை?—ஏனெனில் “அட்வைஸ் செய்வது சுலபம்..வாழ்ந்து காட்டுவது கடினம் “நீங்கள் முதலாம் ரகத்தை சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொள்கிறீகளா?

இந்நாட்டின் மையக்கலாச்சாரம் “மதசார்பின்மை”..இதை போதித்தது இந்துதர்மம்..ஆர்.எஸ்.எஸை டி.என்.ஏ யில் உள்ள மோடி முதல் ஆர்.எஸ்.எஸையே தெரியாத அறியாத கோடிக்கணக்கான இந்தியனின் டி.என்.ஏ யிலும் “சர்வா ஜனதோஸ்து சுகினா பவந்துதான்” உள்ளது..இதை நீங்களோ அரசமைப்பு சட்டமோ எங்களுக்கும் கற்றுத்தரவேண்டாம்..

மக்கள் அமைதியாக இருக்கும் போது உங்களின் இந்த உபதேசங்கள் “மைனாரிட்டிகளை உசுப்பிவிடமட்டுமே செய்யும்..வேறு நற்பலன்களை அவர்களுக்கு தராது.என்பதை நீங்கள் ஏன் அறியவில்லை?

சச்சார் கமிட்டி அறிக்கையில் “மைனாரிட்டிகளை காக்கும் மஹானுபாவன்” என குஜராத் அரசையே சுட்டிக்காட்டியுள்ளது..காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அல்ல..இது தெரிந்தும் நீங்கள் எழுதுவது உங்கள் “நம்பகத்தன்மைக்கு “ ஒரு கேள்விக்குறியாகவே நான் பார்க்கிறேன்.

பிரதமர் தவிர ( நேரு குடும்பத்திற்கு மட்டுமே அது குத்தகை) வேறு பதவிகளில் ஒன்றை கொடுத்து விட்டு “மைனாரிட்டிகளை” ஏமாற்றிவரும் ஜாலம் காங்கிரசுக்கு மட்டுமே தெரியும்.என்பது உங்களுக்கும் தெரியும்

உப்பு தடவிய பிரம்பு உதராணம் மூலம் நீங்கள் ஒரு உண்மையை போட்டு உடைத்திருக்கிறீர்கள்.உங்கள் கடிதத்தின் “ஒரு சார்பு நிலைக்கு “ இதுவே சாட்சியம்..

“தப்பு செய்தால் தலைமை ஆசிரியர் எப்படியெல்லாம் தோலை உரிப்பார்” என்ற வரிகளின் மூலம் “ மைனாரிட்டிகள் தப்பு செய்வார்கள் என்றும், அதற்கு தண்டனை தரக்கூடாது என்றும். மோடியை கட்டுப்பாடான ஒரு தலைமை ஆசிரியராகவும்.,மாணவர்களை ( மைனாரிட்டிகளை )அவர் கண்டிக்க கூடாது எனவும். தெளிவாக சொல்லி மைனாரிட்டிகளை தாஜா செய்யும் போக்கை ஊக்குவிக்க சொல்லியுள்ளீர்கள்.

முசாஃபர் நகர் கலவரம் உ.பி மாநிலத்தில் காங்கிரசின் கூட்டாளி முலயாம் சிங்கின் சமாஜவாடி ஆட்சியில் நடைபெற்றதை மோடியின் கடிதத்தில் குறிப்பிடும் உங்கள் உள் நோக்கம் என்ன? மைனாரிட்டிகள் எங்கு தவறு செய்தாலும்,பாதிக்கபட்டாலும் அதற்கு ஏக போக குத்தகைதராராக மோடியைத்தான் ஆக்குவீற்களோ?

“முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்தியாவின் மத சிறுபாம்ன்மையினர் அனைவரும், தங்கள் மனதில் ஆழமான வடுக்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள்”..என்று எழுதியிருக்கிறீர்கள்..

உலகிலுள்ள எந்த நாட்டிலும் இல்லாத சுதந்திரமும் சமத்துவமும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு உள்ளது என்பது தங்களுக்கு தெரியாததா? பாகிஸ்தானிலும். வங்க தேசத்திலும். இந்துக்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்பதை நவாஸ் ஷெரிஃபிடமும் கலிதாஜியாவிடமும் கேட்டு சொல்லுங்கள்..ஏன் இலங்கையில் தமிழ் சிறுபான்மையினருக்கு என்ன உரிமை சலுகை என உங்கள் நண்பர் ராஜபக்‌ஷேவிடம் கேட்டு சொல்லுங்கள்..

முஸ்லீம் நாடுகளில் கூட அவர்களுக்கு கிடைக்காத சலுகைகள் இந்தியாவில் அவர்களுக்கு கிடைக்கிறது என்பதை நீங்கள் ஏற்க மறுப்பது ஏன்?
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் “மைனாரிட்டிகளை உசுப்பிவிட்டு தேசிய நீரோட்டத்துடன் அவர்களை சேரவிடாமல் செய்யும்  பேச்சுக்களை தொடரப்போகிறீர்கள்?

கடந்த 12 ஆண்டுகாலமாக “உங்களை போன்ற எல்லோரும் ஓரணியில் திரண்டு” நரேந்திர மோடி மீது அபாண்ட தாக்குதல்களை நடத்தியதற்கு. இந்திய மக்கள் ஓட்டுச்சீட்டின் மூலம் அவருக்கு “நியாய தீர்ப்பு” வழங்கிய பின்னரும் ஏன் உங்கள் புலம்பல்கள் குறையவில்லை? புத்தி தெளிய வில்லை?

மோடியின் டி.என்.ஏயில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதால்தான் அவர் 125 கோடி மக்களும் ஒன்று என்று சிந்திக்கிறார்.. காங்கிரசை போல் ”தேர்தல் மதசார்பின்மை” மட்டுமே இருந்திருந்தால் உங்களை போல் மைனாரிட்டிகளை பிரித்துப்பேசி. “கடிதம் எழுதிக்கொண்டிருப்பார்”

இனியாவது மைனார்ட்டி—மெஜாரிட்டி என பிரித்துப்பேசி, “உசிப்பிவிடுவதை” தவிருங்கள்..125 கோடி மக்களும் ஒன்று என்ற “சித்தாந்தத்தை” துவக்குங்கள்..பிரித்தாளும் நரிகளை துரத்துங்கள்..

மோடியின் ஆட்சியில் எல்லோரும் நலமாக இருக்கப்போகிறார்கள்..நீங்கள் உட்பட….அதை ஜாதி..மொழி…மதம் வாரியாக பார்க்காமல்…”ஒன்றாக “ பாருங்கள்..

இனி உங்களுக்கு ஓய்வெடுக்கும் காலம் .--.கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்..

நன்றி..ஜெய்ஹிந்த்..வந்தேமாதரம்..பாரத் மாதாகீ ஜெய் 

Sunday, April 27, 2014

சோனியாவின் “அந்திமக்காலம்”


(குறிப்பு...இது உயிர் பற்றிய தலைப்பல்ல..அவர் நீண்ட நாள் வாழ்ந்து அவரது மகனுக்கு 50 வயதிலேயாவது திருமணம் செய்து வைத்து இத்தாலிய மாஃபியாக்களின் பிடியில் படாமல் அத்தனை சொத்துக்களையும் அனுபவித்து வாழவேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை)..........மேலே படியுங்கள்.

2004 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை கேட்கப்போன இவரை தடுத்து நிறுத்தியது இருவர்தான்..

ஒருவர் ஜனாதிபதி அப்துல் கலாம்...உங்களுக்கு இப்பதவியை அலங்கரிக்க உரிமை இல்லை என்று தைரியமாக சொன்னதுதான்..

மற்றவர்..சுஷ்மா சுவராஜ்..உங்கலுக்கு பிரதமர் பதவி தரப்பட்டால், நான் மொட்டையடித்து வெள்ளை சேலை உடுத்துவேன் என்றதுதான்..

அதிகாரம் முழுதும் தன் கைய்யில், பொறுப்புக்கள் முழுதும் பாவம் மன்மோகன் சிங்கிடம்,..என மஹாராணியாக வாழ்ந்த சோனியாவின், ‘அரச போகத்துக்கு” “இறுதிகாலம் “ வந்துவிட்டது..

ஆம்..கடவுள்தான் காப்பாற்ர வேண்டும் என்று சோனியா சொன்னது நாட்டையல்ல...தன்னையும் தன் குடும்பத்தையும்தான்..

எப்போது காங்கிரச் கூட்டணிக்காக “ஆலாய்” பரக்க ஆரம்பித்துவிட்டதோ..மூன்றாவது அணி..நாலாவது அணி என சல்லடை போட்டு தேட ஆரம்பித்து விட்டதோ அப்போதே தெரிந்து விட்டது..சோனியாவின் இறுதிகாலம் நெருங்கிவிட்டது..என்று..

தோல்விக்கு பிறகு அந்த குடும்பம் இந்தியாவில் இருக்காது..நான் ஒன்றும் ஜோசியம் சொல்லவில்லை..அவர்களுக்கு சொத்து பல ஆயிரம் கோடி சேர்ந்துவிட்டது..அத்த்னையும் கொஞ்சம் கொஞ்சமாக இத்தாலிக்கு கொண்டு சேர்த்தாகிவிட்டது..

மோடியிடம் ஆட்சி வந்து விட்டால் 25 வருடம் அவரை அசைக்க முடியாது..அவ்வளவுகாலம் போராட ராகுலுக்கு என்ன பயித்தியமா பிடித்திருக்கிறது....

ஆட்சி மாற்றத்தில் அதிக ச்ந்தோஷத்தில் இருப்பது சோனியாவின் அம்மாதான்..44 வருஷமா பாக்கதா பொண்ண இப்ப ஒரே அடியாக தொடர்ந்து பார்க்கபோகிறோமே என்கிற சந்தோஷத்தில் அத்தனை குடும்ப உறுப்பினர்களும் “ஆரத்தி கைய்யில் வைத்துக்கொண்டு” இத்தாலியில் காத்திருக்கின்றனர்..

நாமும் வழியனுப்ப தயாராவோம்.

Saturday, April 26, 2014

அம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்

”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ,இன்றைக்கு மூன்றாவதுமுறை சி.எம்.

இடது சாரிகளை கழற்றிவிட்டு, தவ்ஹீத் ஜமாத்துக்கு அடிபணிந்து, மோடியை தாக்கி பேசி தனது ஆதரவு ஓட்டுக்களை இழந்து, இப்படி ஏற்பட்ட சரிவுகளை சரிசெய்ய..”தனலெட்சுமியையே” நம்பினார்..

“தோல்வி ஜன்னியின்” உளரல்களை சரிசெய்யும் “மருந்து ’ பணத்திடம் இருப்பதாக “ஜெ” நினைத்ததால், தொகுதிக்கு ரூ.20 கோடியென் 800 கோடியை “டிஸ்பெட்ச்” செய்தார்..

144 தடை உத்தரவு “சட்டம் ஒழுங்கை “ பாதுகாக்க போடப்பட்டது என்றாலும், “ஜெ” அதை மிகவும் லாவகமாக பயன்படுத்திக்கொண்டார்..

தேர்தல் கமிஷனின் தீவிர செயல்பாடுகளையும் மீறி, ஆம்புலன்ஸ்களிலும், “ஆம்வே” பெட்டிகளிலும், பணத்தை கடத்தி ஆளும் கட்சி தனது தேர்தல் தில்லு முல்லுகளை, தொடங்கியது.

கைய்யில் ஏராளமாக பணம் இருப்பதால், சிறந்த திட்டமிடுதலை செய்து, கமிஷன் கண்ணில் மண்ணைத்தூவி, பூத்துக்கு 25,000/= ரூபாய் என ஆரம்பத்திலேயே பட்டுவாடாவை அதிமுக நடத்திவிட்டது.

இந்த விஷயத்தில் திமுக கூட கொஞ்சம் பிந்தங்கித்தான் இருந்தது.பொள்ளாச்சி, நீலகிரி, தஞ்சாவூர், வடசென்னை, தவிர திமுகவால், பணத்தில் ஆளும் கட்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

24 ம் தேதி, தேர்தலுக்கு 4 நாள் முன்னதாகவே “திருமங்கலம் ஃபார்மூலா” பணபட்டுவாடாவை அதிமுக தொடங்கியது..பாஜக உள்ளிட்ட தே.ஜ.கூ. தொண்டர்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தியும், கைய்யும் களவுமக பிடித்துக்கொடுத்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரியை  சந்தித்து முரையிட்டபோது, “மே மாதம் 16ம் தெதியோடு தேர்தல் கமிஷன் மூட்டை கட்டிக்கொண்டு போய் விடும்..அதற்கு பிறகு மாநில அரசோடுதான் நாங்கள் குப்பை கொட்டியாக வேண்டும்”..என நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை சூசகமாக சொன்னார்.

பாஜக மூத்த தலைவரும் தென் சென்னை பாரளுமன்ற் வேட்பாளருமான இல.கணேசன் அவர்கள், பணபட்டுவாடாவை கண்டித்து காரசாரமான, ஆதராங்களுடன் கூடிய அறிக்கைவெளியிட்டார்..எந்த நடவடிக்கையும் இல்லை.ஒரே ஆறுதல் நாடுமுழுதும் “ஜெ” யின் சூதாட்டம் அம்பலமானது..

எல்லா எதிர்கட்சி தலைவர்களும் புகார் கொடுத்தும் போலீசோ, கமிஷனோ, எந்த ந்டவடிக்கையும் எடுக்க வில்லை.ஊர்டங்கு உத்தரவை பயன்படுத்தி, திருடன் ஊரை கொள்ளை அடித்தமாதிரி, 144 தடை உத்தரவை பயன் படுத்தி ஆளும் கட்சி, வாக்காளர்களுக்கு, பனபட்டுவாடாவை நிம்மதியாக நடத்தி முடித்தது.

இதனால் தேர்தல் முடிவுகளில் “பணத்தின் தாக்கம் “ இருக்குமோ?...எல்லா வாக்காளர்களும், விலை போயிருப்பார்களோ?...

இக்கேள்விகளுக்கு  பதில் ..பெட்டியை உடைத்து பார்த்தால்தான் தெரியும்.

வாக்குச்சாவடிகளில், “போலிங்” சிறப்பாக நடைபெற்றது...எல்லா ஊர்களிலும் இருந்து தே.ஜ.கூட்டணிக்கு ஆதரவாக வாக்குக்கள் பதிவாகி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.மாலையில் இறுதி நிலவரமும் இதையே உறுதி செய்தது.

இருப்பினும் ஏன் சந்தேகம்? ஏன் கவலை? என நீங்கள் கேட்பது புரிகிறது..

மாநிலம் மூழுவதும் மோடி அலை வீசுவதை காணமுடிந்தது..குக் கிராமத்து பெண் வாக்காளரும், தாமரை சின்னத்தில் வாக்களித்தை கேட்க முடிந்தது..

அடுத்தநாள், வாக்கிங்கில், ஷாப்பிங்கில், டீ ஸ்டாலில், பஸ்ஸில், பேங்கில், பார்த்த மக்களெல்லாம், நமக்கு கை கொடுத்து வாழ்த்து சொன்னது, வெற்றியை உறுதி செய்தது..

இருந்தாலும் , இக்கட்டுரையை படித்து முடித்தவுடன், வரும் 16ந்தேதி வாக்கு எண்னும் போது, தே,ஜ.கூ.வின் வெற்றியின் வாக்கு வித்தியாசம் குறைந்தால்,..அதற்கு “அம்மாவின் 800 கோடி பணபட்டுவாடவும், அதை செவ்வனெ செய்ய உதவிய 144 தடை உத்தரவுமே” காரணமாக இருக்க முடியும்..

மக்கள் புத்திசாலிகள்..”வாங்கிக்கொண்டு
”, கொடுத்தவர்களை ”வெளுத்து வாங்கி “ விடுவார்கள்..
சந்திப்போம்..மே 16 இல்...வெற்றி செய்தியுடன்...

Monday, February 10, 2014

மோடி என்னும் இணைப்புச் சங்கிலி

பிப்ரவரி 8 சென்னை மாநகரின் சரித்திரத்தில் பொன்னாள்..பொன்னாரின் முயற்சியால் “கண்ணான தலைவன்” நரேந்திர மோடியை மீண்டும் “காணக்கிடைத்த” நாள்.

தங்களுக்கு “மாற்று”இல்லை..எனவே தமிழகத்தில் “மாற்றம் “இல்லை--என ..தமிழ் மக்களை “ஏமாற்றி” வந்த திராவிட கட்சிகளுக்கு “பேதி மருந்து” கொடுக்க மோடி சென்னை வந்த நாள்..

வங்கக்கடல் “வண்டலூருக்குள்” புகுந்ததோ என லட்சக்கணக்கான மனித தலைகள் “அலையென” ஆர்ப்பரித்து வந்த நாள்.

திருச்சி இளந்தாமரை மாநாட்டுக்குப் பிறகு, தமிழக அரசியலை புரட்டிப்போட்டது பாஜக..திராவிட கட்சிகளின் வயிற்றில் “புளியை கரைத்தது “ பாஜக..

கூட்டம் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக ஆளும் கட்சி தனது போலீசையும் ,போக்குவரத்து அதிகாரிகளையும், முடுக்கிவிட்டு, மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது முதல், பஸ்களுக்கு பர்மிட் கொடுப்பது வரை, ”மறுப்பு” செய்தும், தொந்தரவு கொடுத்து பிறகும் --மாநாட்டில் கூட்டம் லைமோதியது.

மதுரை தாமரை சங்கமத்துக்கு செய்தது போல மாநாட்டு பந்தலுக்கு 15 கி.மீ தூரத்திலேயே தொண்டர்களை  போலீஸ்இறக்கி விட்ட பிறகும், ”நாளைக்கு நாட்டை வழி நடத்த” --இன்றைக்கே 20 கி.மீ தூரம் ஒவ்வொரு பாஜக. தொண்டனும்,  “நடை பயிற்சி.”-செய்ததை பார்க்க முடிந்தது.

திருவாரூர்--வாணியம்பாடி, வேலூர் ,ஆம்பூர்..சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த இஸ்லாமிய சகோதரர்கள், மதுரை, குமரி, கோவை பகுதிகளில் இருந்து வந்த கிரிஸ்தவ சகோதரர்கள், சேலம் ,சென்னை , மதுரை பகுதிகளில் இருந்து வந்த வடமாநில அன்பர்கள், என கூட்டம் “நெட்டித்தள்ளியது”

ஐ.ஜே.கே--புதிய நீதிக்கட்சி, மற்றும் மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி என கூட்டணிக்கட்சிகளின் கொடிகட்டிய வகனங்களின் அணிவகுப்பு கண்களை கொள்ளை கொண்டது..

மாநாட்டு மேடையின் ஏற்பாடு எப்போதும் போல் பிர்மாண்டத்தையும், அடுத்த “ஆளும் கட்சி “ யின் “களை “ வந்துவிட்டதையும் பறைசாற்றியது..

மதிமுகவின் மல்லை சத்யாவும் ஐஜெகே யின் பாரிவேந்தரும் சிறப்பாக உரையாற்றினர்..கொங்குவின் ஈஸ்வரனின் பேச்சு புதிய தேர்தல் கோஷத்தை முன்வைத்தது..

“மதத்தை பற்றி பேசாமல் வளர்ச்சியை பற்றி மட்டுமே பேச மற்ற கட்சிகளுக்கு தைரியம் உண்டா?”--என்ற அவரின் கேள்வியே தேர்தல் பிரச்சாரத்தின் மையக்கருத்தாக உருவெடுக்க போகிறது..

வெங்கையா நாயுடுவின் “சரவெடி” அனைத்து கட்சியின் தொண்டர்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது..

“மறு எண்ணிக்கை மந்திரி” சிதம்பரத்துக்கு சவுக்கடி---”ஹார்வெடா?--ஹார்ட்
வொர்க்கா”?என்ற  மோடியின் இதயம் தொட்ட வார்த்தைகள்  தமிழ் மக்களை சிந்திக்க வைத்தது..
மாநாடு முடிந்ததும் மாநாட்டு பந்தலில் “சாரய பாட்டில்கள் இல்லை “ என்னும் செய்திக்கு பதிலாக இம்முறை வண்டலூரை சுற்றிய பகுதிகளில் “டாஸ்மாக்கில்” அதிக விற்பனை என்னும் தினமலர் செய்தி எனக்கு சந்தோஷத்தையே தந்தது..

ஆம்..ஒருபுறம் சாரய விற்பனை  செய்தி “சங்கடத்தை” தந்தாலும், அதுவே பாஜக மாநாட்டில் கூட்டணி கட்சிகள் அதிக அளவில் கலந்து கொண்டதற்கான  ”அத்தாட்சி” என்று எடுத்துக்கொள்ளலாம்.

பொதுக்கூட்டத்தில் “விசில்” சத்தம் வருவதும்..தலையில் கட்சிக்கொடியை தொண்டன் கட்டிக்கொண்டு வருவதும், பாஜக அடித்தட்டு மக்களிடமும் சென்று விட்டது என்பதற்கு அர்த்தம்..

தமிழ்நாட்டில், பாஜக மாநாடு நடந்த பகுதியில், டாஸ்மாக்கில் விற்பனை அதிகம் என்றால், கூட்டணிக்கட்சி தொண்டர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள் என்று அர்த்தம்..

அது இப்போது நடந்திருக்கிறது..பாஜக கூட்டணிகட்சிகளை அதிகம் ஈர்த்திருக்கிறது..என்ன சரிதானே..

ஆக காங்கிரஸ் நாட்டு மக்களை வறுமை--ஊழல், வளர்ச்சியின்மை என்னும் அடிமை சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தது.
பாஜகவின் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து,தமிழ்நாட்டு மக்களை, தேசிய நீரோட்ட்த்தில், வளர்ச்சிப்பாதையில், சகோதரத்துவத்தில், ஒற்றுமை  “சங்கிலியால்” இணைத்து விட்டார்..
மோடியின் “அன்புச்சங்கிலியில்” தமிழகம் கட்டுண்டது..ஆம்...சென்னையில்..