Pages

Sunday, January 20, 2013

நேற்று ராகுலுக்கு முடி சூட்டு விழா

நேற்று ராகுலுக்கு முடி சூட்டு விழா---ஆனால் அது கட்சிக்குள் மட்டுமே

நாட்டுக்கே முடிசூட்டவேண்டும் என்னும் ஆசையில் அது நடத்தப்பட்டது..ஆனால் அது நடக்குமா?

எந்த ஒரு “நிறுவனத்திலும்” “அப்பாயிண்ட்மெண்ட்” கடிதம் “இண்டர்வியூவுக்குப்” பின்பே கிடைக்கும்

ராகுலுக்கு என்ன தகுதியென யாருக்கும் தெரியாது..ஏற்கனவே வைத்த “சோதனைகளில்” எல்லாம் அவருக்கு தோல்வியே..

அவ்ருடைய குடும்ப நிறுவனம் என்பதால்..தோற்றுப்போனவருக்கு “அப்பாயிண்ட்னெண்ட்” கடிதம் (துணைத்தலைவர்)கொடுத்துள்ளனர்..

நாட்டுக்கு முடிசூடவேண்டும் என்றால் ...நம் ..நாலு கேள்விக்கு மட்டும் அவர்பதில் சொல்வாரா?

1.நாற்பத்தி நான்கு வயதாகும் ராகுல் காந்தி..தனது 16 வயதிலிருந்து 32 வயதுவரை எந்த நாட்டில் என்ன செய்து கொண்டிருந்தார்?( 16 ஆண்டு தனது “டீன் ஏஜ் உட்பட ” அவர் இந்தியாவில் இல்லை )

2.பிரதமராகும் கனவில் உள்ள இவர் எப்போது திருமணம் செய்து கொள்வார்?

3.இங்கிலாந்திலும்..அமெரிக்காவி
லும் படித்ததாக சொல்கிறார்களே..அங்கு என்ன எங்கு எப்போது படித்தார்..என்னென்ன பட்டங்கள் பெற்றார்?

4..இந்தியாவின் --பத்து மாநிலங்கள்,-- பதினைந்து மொழிகள், --இருபது நதிகள்,-- இருபத்தைந்து ஜாதிகள் --பெயரை இவரால் யாரிடமும் கேட்காமல் சொல்லமுடியுமா?

நிர்வாக அனுபவம் ,
தேசத்தை பற்றிய தொலை நோக்கு கண்ணோட்டம்,
கரைபடாத கைகள், என்ற தகுதிகளை எல்லாம் விட்டுவிடுவோம்...
கடந்த 9 ஆண்டுகளில் பார்லி.மெண்ட்டில் என்ன பேசினார்..எவ்வளவு நாள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்?
இதை வைத்தாவது அவரது குறைந்த பட்ச தகுதி--திறமை--இவைகளை தெரிந்துகொள்ளலாமல்லவா?

அவர் சாதித்தது ஒன்றுமில்லை---
அவர் கலந்து கொண்டது 50 சதவீத வேலை நாட்களுக்கும் குறைவு

முடிவுகளை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

காங்கிரசுக்கு ஒரு கேள்வி

இப்போது காங்கிரஸ் தலைவர்---சோனியா காந்தி
காங்கிரஸ் துணைத்தலைவர்---ராகுல் காந்தி

பொதுச்செயலாளருக்கு--பிரியங்கா காந்தி
பொருளாளருக்கு --ராபர்ட் வதேதரா---வை எப்போது நியமிக்க போகிறீர்கள்..

ஆவலோடு காத்திருக்கிறோம்.

3 comments:

sakthi said...

சிறப்பான பகிர்வு anna

DiaryAtoZ.com said...

இந்தமுறை காங்கிரஸ் வருவது ரொம்ப கஷ்டம். Better Luck Next Time.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவன் நான்
அதில் பொதிந்துள்ள வாதத் திறனுக்கும்
ஆழமான அலசலுக்கும் நான் பரம ரசிகன்
கிரீடத்தை சரியான சிரசில்தான் சூட்டியிருக்கிறார்கள்
மேலும் பல உச்சம் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்