Pages

Sunday, December 13, 2015

மீடியா --கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்


டிசம்பர் 1ந்தேதி இரவு கடும் மழை ..இரண்டாம்தேதி சென்னை மற்றும் கடலுரின் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகியது.


1ந்தேதி பிற்பகல் 2 மணிக்கே சென்னை குரோம்பேட்டை விவேகானதா பள்ளியில் சேவாபாரதி அடுப்பு பற்றவைத்துவிட்டது. சுமார் 1500 உணவு ,பொட்டலங்கள் உடனடியாக தயாரிக்கப்பட்டு குரோம் பேட்டை--தாம்பரம் ரயில் நிலையங்களில் "அல்லாடிக்கொண்டிருந்த" பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது..( கடும் மழையால் பலர் கடையை அடைத்துவிட்டு எஸ்கேப்)

இரண்டாம்தேதி மாலை செம்பரபாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டு "ஏரி "களில் கட்டிய வீடுகள் --அப்பார்ட்மெண்ட்" முழ்கத்தொடங்கியது..ஆங்காங்கே இருந்த "ஸ்வயம் சேவகர்கள்" எந்த கட்டளையும் எதிர்பார்க்காமல் இரவோடு இரவாக மக்களை காப்பாற்றும் பணியில் இறங்கினர்..

3ந்தேதி காலை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் "பரிவார் இயக்க " நிர்வாகிகள் கூடி புரசைவால்கம் சேவாபாரதி அலுவலகம்,-- பாஜக கமலாலயம், ----குரோம்பேட் பள்ளி என 3 பகுதிகள் உடனடியாக செயல் படத்துவன்கினர் ..

முதலில் காப்பாற்றுதல்--மற்றும் மீட்பு பனி
இரண்டாவது தங்கவைத்தால் மற்றும் உணவு
முன்றாவதாக நிவாரணம் மறுவாழ்வு

ஆ.ர.எஸ்.எஸில் சாதாரணமாக எந்த விஷயத்தையும் குறித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் உண்டு.. கூட்டங்களில் "நடந்தவற்றை" சொல்லும் பொது அது புள்ளி விவரமாக இருக்கும்..அந்த புள்ளிவிவரம் பெரும்பாலும் 100 சதவீதம் சரியாக(உண்மையாக) இருக்கும்

இதுவரை அங்கிருந்து கிடைத்த விவரங்கள்

1.சென்னையை 17 பகுதிகளாக பிரித்து அதில் 112 மய்யங்களில் பணி

2..இதில் காஞசிபுரம்-- கடலூர் பகுதியில் பணியில் இடுபட்டுள்ள 29 மையங்களும் அடங்கும்

3.இதுவரை 18 லட்சம் உணவுப்பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ..இது தவிர 8 லட்சம் சப்பாத்திகளும் உண்டு

4.--35000 குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப்பருட்களில் உடனடித்தேவையான
குடம்--மக்கு--தீப்பெட்டி --மெழுகுவர்த்தி--பாய்--தட்டு--டம்ளர்--பிளீச்சிங் பவுடர்--பினாயில்--அரிசி --பருப்பு--காய்கறிகள் --எண்ணெய் கொண்ட ஒரு பாக்கட் கொடுக்கப்பட்டுள்ளது --இதை இன்னும் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் குடும்பங்களுக்கும் நீட்டிக்க முயற்ச்சி நடந்து வருகிறது..

5--இது தவிர இருசக்கரவாகன பழுது நீக்கும் முகாம் 22 இடங்களில் ஸ்ரீராம் நிறுவனத்துடன் இணைந்து நடந்து வருகிறது..இதி ரூ 500 பெருமான உதிரிபாகங்களும்--சர்வீசும் இலவசம்

6..பதிமுன்று மாநகராட்சி பள்ளிகள் முழுவதுமாக கன்னாடி போல சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது..

7..--115 மருத்துவ முகாம் களில் , இதுவரை 35,000 பேருக்கு சிகிச்சை மற்றும் இலவச மருன்து வழங்க பட்டுள்ளது..இதில் 165 டாக்டர்கள் வைத்தியம் பார்த்துள்ளனர்..

8..இந்த சேவை பணியில், 11,780, ஆ.எஸ்.எஸ். மற்றும் சேவாபாரதி பாஜக தொண்டர்கள் இடுபட்டுள்ளனர்.

9--.ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கேஸ் ஸ்டவ் மற்றும் ஒரு கொசுவலை கொடுக்கும் திட்டமும் உள்ளது

10--இந்த மனிதநேயப்பணியில், சாதி, மத, மொழி, மாகான எல்லைகளை கடந்து, இந்து முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் உதவி மற்றும் உணவு வழ்ங்கப்பட்டுள்ளது..

11..ஆங்காங்கே முஸ்லீம் இயக்கத்தை சேர்ந்த "தொண்டாளர்களுடன் " சேர்ந்து பணியாற்றியும், பொருட்கள் "கொடுத்து--வாங்கியும்" பணியாற்றிய நல்ல அனுபவங்கள் நடந்தேறியுள்ளது.

இவ்வளவு செய்த்தேன் என்கிறீர்களே --உங்களை தொலைகாட்சியில் காட்டவில்லையே என வெளியூர்களில் இருந்து பலர் எங்களை கேட்ட வண்ணம் இருந்தனர்

தொலைகாட்சியில் வரவேண்டும் என்பதற்காக செய்பவர்கள் அல்ல நாங்கள்..

ஆனாலும், ஒருசிலரை மட்டுமே குறிவைத்து தொலை காட்சிகள், காண்பித்தன --அல்லது இருட்டடிப்பு செய்தன --என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா?--இது ஊடகங்களுக்கே வெளிச்சம்..

அவர்கள் ஆத்மா பரிசோதனை செய்துகொண்டால், எங்களுக்கு எவ்வளவு "ஸ்பேஸ் "--கொடுத்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்
எனவே

இது
வேண்டுமென்றே செய்யப்பட்டதா?
தெரியாமல் நடந்ததா?
அரிநது செய்யப்பட இருட்டடிப்பா?
அல்லது இந்து இயக்கங்கள் மீது உள்ள "இன்டாலரன்ஸ்"ஆ

கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்

4 comments:

Anonymous said...

சேகர், எல்லா ஊடகமும் உங்கள் சேவையை புறக்கணித்து விட்டது, இருட்டடிப்பு செய்துவிட்டது என்று சொல்லிவிட முடியுமா? உங்கள் குலக்கொழுந்து பாண்டே கூடவா கண்டுகொள்ளவில்லை?மத்தியில் ஆளுங்கட்சியான உங்களுக்கே இருட்டடிப்பா? ஆச்சர்யமாக இருக்கிறதே? உங்களுடன் கூட்டணியில் இருப்பதாக நீங்களே சொல்லிக் கொள்ளும் தே தி மு க, பா ம க ,பச்சமுத்துவின் கட்சியெல்லாம் வைத்திருக்கும் டிவியில் கூட காட்டவில்லையே? ''எல்லாவற்றையும் குறித்து வைத்து கொள்ளும்'' பழக்கம் உள்ள ஆர் எஸ் எஸ்ஸில் போட்டோ, விடியோ எடுத்து வைத்திருந்தால் இங்கு உங்கள் தளத்திலாவது பகிரலாமே? ஆனாலும் அந்த 11,780 பேர் கணக்கு சரிதானுங்களா? என்ன தான் ''குறித்து வைத்து கொண்டாலும்'' நீங்கள் கைத்தவறுதலாக இங்கு தட்டச்சு செய்திருக்கலாமே என்ற எண்ணத்தில் கேட்டேன்.

எஸ்.ஆர்.சேகர் said...

அன்பு நண்பரே..என் பெயரை நீங்கள் குறிப்பிட்டீர்கள்.உங்கள் பெயரை குறிப்பிடும் “பாக்கியம்” எனக்கு நீங்கள் தரவில்லை..எங்கள் குலக்கொழுந்து பாண்டேயும் உங்கள் குலகொழுந்துகள் டி.விக்களையும் நீங்கள் பார்க்கவில்லை போலும்..என்னுடைய முகநூல் பக்ககங்களிலேயும், ஆ.எஸ்.எஸ்இன்..vishwa samvad kendra பக்கங்கலிலேயேயும் ஏராளமான பாஜக தொண்டர்களின் பக்கங்களிலேயும் வெள்ள நிவாரண பணிகளின் போட்டோ--வீடியோக்கள், பகிரப்படுகிறது..நான் எழுதிய 11,780 கணக்கு சரிதான் என்பது “டி.வி.பார்க்காத, முகநூல் படிக்காத, களத்தில் இல்லாத உங்களுக்கு எப்படியும் புரியாது..கவலை விட்டு அறிவாலயத்தில் எதாவது வேலை இருந்தால் போய் பாருங்கள்...

Anonymous said...

திரு.சேகர் அவர்களே , முதலில் போட்ட பின்னூட்டத்தில் நேரடியாக பெயரை சொல்லி நான் எழுதியது தவறு தான்.அறிமுகமில்லாத நிலையில் அவ்வாறு விளிப்பது சற்று பண்பு குறைவான செயலாகவே கருத வாய்ப்பளிக்கிறது என்பதை உணர்கிறேன் .மன்னிக்கவும்.
உங்களையும், பாண்டேயையும் குறை கண்டால் உடனே அறிவாலயத்தில் போய் வேலை பார்க்க சொன்னால் எப்படி? திமுகவையும், மனுஷ் போன்றவர்களையும் கூடத்தான் விமர்சிக்கிறோம் .அதற்காக கமலாயத்திலேயோ, லாயிட்ஸ் ரோடிலேயோ போய் வேலை கேட்க முடியுமா? நீங்க போய் பார்க்க சொல்கிற "வேலை" என்னவென்று புரிகிறது. உங்களை ஒரு கேள்வி கேட்ட பாவத்திற்காக என் படிப்பிற்கோ அனுபவத்திற்கோ தொடர்பில்லாத வேலையை போய் பார்க்க சொல்வது என்ன மாதிரியான காழ்ப்புணர்வு பாருங்கள்? பி ஜே பி இலே நான் பார்த்த வரையில் நெறியோடு பேசுகின்ற முகமாக கருதி தான் உங்களோடு உரையாட வந்தேன். போய் வாருங்கள் என்று சொல்லாமல் போய் பாருங்கள் என்பதே விரட்டுவது தான் என்று நான் கருதிக் கொள்ளலாமா?

வேகநரி said...

பல தரப்பு நல்லவர்கள் உதவி செய்யும் போது ஒரு தரப்பை மட்டும் விளம்பரபடுதுவது ஏன் என்று புரியவில்லை!