Pages

Tuesday, September 6, 2011

சோனியா அரசு..... ” விக்கிலீக்ஸ் பகீர் ”.......தலை சுற்றுதே....



விக்கிலீக்ஸ் மத்திய காங்கிரஸ் மந்திரிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறது..
அப்படியானால் அவர்களெல்லாம் “ ரொம்ப யோக்கியமானவர்கள் “--என்று இன்னாள் வரை நாம் நினைத்திருந்தோமா?---அந்த நினைப்பில் “ ஜூலியன் அசாஞ் “ மண்ணைவாரி போட்டுவிட்டாரா?---
 
 


அதெல்லாம் ஒன்றுமில்லை....விக்கிலீக்ஸ்.. "disclosures " ஒன்றும் ஆச்சரியமில்லை...புதுமையில்லை..ஆனால் இதையெல்லாம் விக்கிலீக்ஸ் சொன்னால்தானே நம்மாளு நம்புகிறான்..ஒரு மகாபாரதத்தையும்..ஒரு ராமாயணத்தையும்..ஒரு மேற்கத்திய வெள்ளைத்தோல்காரன் “ மாக்ஸ்முல்லர் ‘சொன்னால்தானே நம்மாளுக்கு அதன் பெருமை புரிகிறது..

இதில் என்ன கேவலம் என்றால் “ இந்த கேவலமானவர்கள் “ நேற்றுவரை நமக்குத்தான் கேவலமானவர்கள் என்று தெரியும்..இன்று உலகம் முழுவதும் தெரிந்து..நாட்டையே தலைகுனிவுக்கு ஆளாக்கிவிட்டார்களே..என்கிற வருத்தம்தான் நமக்கு..

பொட்டிப்பாம்பாய்...எழுதிக் கொடுத்ததை மட்டும் படிக்கும்---வெளியுறவு மந்திரி..கிருஷ்ணா..
அடுத்த பிரதமராக துடிக்கும் பிரணாப் முகர்ஜி..
கன்னம் வைத்து திருடும் களவாணிகளுக்கு காவல் புரியும் மன்மோகன் சிங்..
அமெரிக்க ஜால்ரா..அடிவருடி..சசிதரூர்..
அமெரிக்காவே இவர் என்ன பேசுகிறார் என தெரியாமல் தவிக்கவைக்கும்..ராகுல் காந்தி..
ரஷ்யாவுக்கு சாமரம் வீசும் அந்தோணி..
சர்வதேச பயங்கரவாதி  “டேவிட்.ஹெட்லி ‘யை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டாம்--என அமெரிக்கா கால்களில் விழுந்த எம்.கே.நாராயணன்..
அவருக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் ப.சிதம்பரம்..
அமெரிக்காவுக்கு  “ சலாம் போடுவதே கொள்கை “.எனக் கொண்ட சோனியா..

இதற்குமேல் தரிகெட்டு செயல் படும் ( செயல்படா )..அரசாங்கம் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?--அப்பப்பா...தலை சுற்றுகிறதே...உங்களுக்கு..?

Sunday, September 4, 2011

” ஜெ” ஆட்சியில் போலிஸ் ”ஃப்ரீயாம்”

வினாயகர் சதுர்த்தி விழா...கடந்த 5 ஆண்டுகளாக கொடி அசைத்து..விசர்ஜன ஊர்வலத்தை துவக்கிவைக்க எனக்கு சிங்கை  வினாயகர்
அருள் பாலித்து வருகிறார்..

போலீஸ் காரர்களின் “சைக்காலஜி”...வித்தியாசமானது.

..உலகெங்கிலுமுள்ள எல்லா நாடுகளிலும் உள்ள போலீஸ் எல்லாம் கிட்டதிட்ட” ஒரே ஜாதிதான் ”

பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்ட பின் அந்த ஆஃபிசரிடம் “ அம்மா ஆட்சியில் என்ன வித்தியாசம்?..எனக் கேட்டேன்.


வெளிப்படையாக பேசினார்...இப்பெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லை என்றார்..மந்திரி..எம்.எல்.ஏக்
கள்..சிபாரிசு செய்ய பயப்படுகிறார்கள் என்றார்..அப்படி ஏதாவது சொன்னால் கூட ரொம்ப பவ்யமாக..”நான் பேசியதாக யாரிடமும் சொல்லி விடாதீர்கள் “என  நட்பாக கேட்டுக்கொள்கிறார்கள்...என்றார்.

திமுக ஆட்சியில் ஒருவேலையும் முழுமையாக செய்ய விடமாட்டார்கள்...வட்டம்..மாவட்
டம்...எம்.எல்.ஏ...மந்திரி ..குறுக்கீடுகள் இருந்து கொண்டே இருக்கும்..என்றார்

போலீஸ் மானிய கோரிக்கை விவாதத்திலும்...தமிழ்நாடு போலீஸை “ஸ்காட்லாண்ட் யார்ட்” போலீஸுக்கு ஒப்பிட்டு புகழ்ந்து தள்ளியாகிவிட்டது..

போலீஸ் காரகளின் உயிருக்கு உத்தரவதம் இல்லை என அனுதாபம் வேறு பட்டாகிவிட்டது..
இப்போதுதான் போலீஸ்காரகள் “ஃப்ரீயாக” இருக்கிறார்களே..இன்னும் ஏன் “கிரைம் ரேட்” குறையவில்லை..
பட்டபகல் கொள்ளை..கொலைகள்..குறைந்த பாடில்லையே..ஏன்?..திருடனைப்பிடி..கொலைகளை தடு..என அம்மா சொன்னால்தான் செய்வார்களா?...

திமுக காரர்களை பிடிக்க மேல் அதிகாரிகள் “கிரீன் சிக்னல்” கொடுக்கிறார்களாம்.....அப்படி எனில் குற்றத்தடுப்புக்கு...குறைப்புக்கு....யாரிடமிருந்து “கிரீன் சிக்னல் “ வரவேண்டும்..நண்பா?..

Saturday, September 3, 2011

இளவரசர் ராகுலும்..இளவரசன் உத்தரகுமாரனும்…


பாண்டவர் வனவாசத்தின் கடைசி கட்டம்….அஞ்ஞாதவாசத்தின் இறுதிக்கட்டம்..…பாண்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விராட தேசத்து மன்னன்..விராடன் மீது கௌரவர்கள்..போர்தொடுக்கின்றனர்.

அந்தப்புரத்தில் பெண்களுக்கு மத்தியில் மட்டுமே வீராவேசம் பேசும் விராட இளவரசன் உத்திர குமாரன் …போர் என்றவுடனே உதரல் எடுத்து பயத்தில் உளறுகிறான்….போர் செய்ய வேண்டியவன்..போருக்கு செல்ல மறுக்கிறான்..

“பிரஹ்நளை”..என்னும் “திருநங்கை” வேடத்தில் மறைந்து வாழும்..அர்ச்சுனன்…தைரியம் ஊட்டி..தேர்சாரதியாகி…போருக்கு அழைத்துச்சென்று..வெற்றியுடன் திரும்புகிறான்..இது இதிஹாச புராணம் மஹாபாரதத்தில் வருகிறது..

நவீன உத்தரகுமாரன்..ராகுல் காந்தியை காங்கிரஸ்..அடுத்த பிரதமர் பதவிக்கு “ரெடி” பண்ணுகிறது..கடந்தவாரம் இந்தியாவே எழுந்து நின்று காக்கிரஸுக்கு எதிராக போராடிய பின்பும் கூட மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிற அதீத நம்பிக்கை காங்கிரஸுக்கு இருக்கத்தான் செய்கிறது.

”வெட்டிப்பேச்சு”…உத்தரகுமாரன்..ரால் வின்சி காந்தி.வெற்றியாளன் .நரேந்திர மோடிக்கு நேரடி போட்டியாம்…..காங்கிரஸ் கணக்கு போட ஆரம்பித்து விட்டது..ஆம்..அதனால்தான்..குஜராத் மாநில “லோக் ஆயுக்தா”..விற்கு மாநில லோக் ஆயுக்தா..நீதிபதியாக..ஆர்.ஏ.மேத்தா..என்கிற காங்கிரஸ் கட்சியின் “கையாளை”..கவர்னர் கம்லா பெனிவால் மூலம்…எல்லா நெறிமுறைகளையும் குப்பையில் தூக்கி வீசிவிட்டு.. நியமித்திருக்கிறது…

மடியில் கனமில்லாத மோடி ஏன் பயப்படவேண்டும்..இது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது..துரும்பை பேனாக்கி..பேனை பெருமாளாக்கும்..கலையில் வல்லவன் காங்கிரஸ்..

டெல்லியில் “வெங்காய விலை “ எகிறியபோது..உப்பையும் பதுக்கி வைத்து ஆட்சியை பிடித்த மாபாதகர்கள் காங்கிரஸார்..
மைனாரிட்டி நரசிம்ஹராவ்..எம்.பி.க்களை விலைபேசி எப்படி 5 ஆண்டுகளையும் ஓட்டினார் என்பதை நாடறியும்..
அதே மாதிரி எம்.பி.க்களை..விலைக்கு வாங்கிய படலத்தை மீண்டும் செய்து அமர்சிங்கை பலியாக்கி தான் தப்பித்தது……2 ஜியில் ராஜாவை பலியாக்கி தான் தப்பித்தது…..ஆந்திராவில் ஜகன் மோஹன் ரெட்டியை காலி செய்ய மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியையும் சி.பி.ஐ.புகாருக்குள் கொண்டுவந்து..அவரை அவமதித்ததும்…காங்கிரஸின் “சீர்மிகு..பார்புகழும்” கலாச்சாரம் ஆகும்..

இப்போது ஊழல் எதிர்ப்பு “போராளிகள்”..அரவிந்த் ஹெஜ்ரிவால்…பிரஷாந்த் பூஷன்”…ஆகியோர் மீது..அவதூருகளை அள்ளிவீசி..அரசு இயந்திரங்களை..ஏவிவிட்டு..அநாகரீக ..அசிங்க..அரசியலை மீண்டும் துவக்கியுள்ளது..காங்கிரஸ்..

காங்கிரஸின் இம்மாதிரியான “வலையில்” மோடி வீழ்வாரா?---”மாட்டார்” என்று சரித்திரம் சொல்கிறது..
அன்று ஆட்சி கட்டிலில் ஏறிய புதிதில்..அனுபவமே மெருகேதாத  பொழுதில்…..…”கோத்ரா” அம்புகளை..மானாவாரியாக வீசிய போழ்தும்……மீடியா உலகும்”—” "விலை நிர்ணயம்  செய்யப்பட்ட “ பத்திரிக்கை யாளர்களும்” ஒன்று திரண்டு தாக்கிய போதும்..…20வது ஷாவொலின் நிஞ்ஞ்சாவாக”..வெற்றியோடு வெளியே வந்தாரே மோடி….

அந்த சரித்திரம் இப்போது மீண்டும் திரும்பும்…ஹாரி பாட்டரின் கதைகளின்..ஜாலவித்தை புரபஸர் போல….வேதாளம் சொன்ன கதைகளில் விக்கிரமாதித்தன் போல…மீண்டுமொரு இமாலய வெற்றி மோடியிடம் வந்துசேர இருக்கிறது..

அந்த சுனாமி..இந்த ரால் வின்சி உத்தரகுமாரனை மட்டுமல்ல…உத்திரை…பிரியன்கா….. அரசி சோனியா… மாகாராஜா..காங்கிரஸ்..ஆகியோரை உருதெரியாமல் சிதைத்து..நடுக்கடலில் தள்ளப்போகிரது…ஆட்சி பறிபோய் காங்கிரஸ்…கும்பல் கொத்து கொத்தாய்….இத்தாலிக்கு வழியனுப்பி வைக்கப்பட காத்திருக்கிறது..