Pages

Saturday, September 3, 2011

இளவரசர் ராகுலும்..இளவரசன் உத்தரகுமாரனும்…


பாண்டவர் வனவாசத்தின் கடைசி கட்டம்….அஞ்ஞாதவாசத்தின் இறுதிக்கட்டம்..…பாண்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விராட தேசத்து மன்னன்..விராடன் மீது கௌரவர்கள்..போர்தொடுக்கின்றனர்.

அந்தப்புரத்தில் பெண்களுக்கு மத்தியில் மட்டுமே வீராவேசம் பேசும் விராட இளவரசன் உத்திர குமாரன் …போர் என்றவுடனே உதரல் எடுத்து பயத்தில் உளறுகிறான்….போர் செய்ய வேண்டியவன்..போருக்கு செல்ல மறுக்கிறான்..

“பிரஹ்நளை”..என்னும் “திருநங்கை” வேடத்தில் மறைந்து வாழும்..அர்ச்சுனன்…தைரியம் ஊட்டி..தேர்சாரதியாகி…போருக்கு அழைத்துச்சென்று..வெற்றியுடன் திரும்புகிறான்..இது இதிஹாச புராணம் மஹாபாரதத்தில் வருகிறது..

நவீன உத்தரகுமாரன்..ராகுல் காந்தியை காங்கிரஸ்..அடுத்த பிரதமர் பதவிக்கு “ரெடி” பண்ணுகிறது..கடந்தவாரம் இந்தியாவே எழுந்து நின்று காக்கிரஸுக்கு எதிராக போராடிய பின்பும் கூட மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிற அதீத நம்பிக்கை காங்கிரஸுக்கு இருக்கத்தான் செய்கிறது.

”வெட்டிப்பேச்சு”…உத்தரகுமாரன்..ரால் வின்சி காந்தி.வெற்றியாளன் .நரேந்திர மோடிக்கு நேரடி போட்டியாம்…..காங்கிரஸ் கணக்கு போட ஆரம்பித்து விட்டது..ஆம்..அதனால்தான்..குஜராத் மாநில “லோக் ஆயுக்தா”..விற்கு மாநில லோக் ஆயுக்தா..நீதிபதியாக..ஆர்.ஏ.மேத்தா..என்கிற காங்கிரஸ் கட்சியின் “கையாளை”..கவர்னர் கம்லா பெனிவால் மூலம்…எல்லா நெறிமுறைகளையும் குப்பையில் தூக்கி வீசிவிட்டு.. நியமித்திருக்கிறது…

மடியில் கனமில்லாத மோடி ஏன் பயப்படவேண்டும்..இது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது..துரும்பை பேனாக்கி..பேனை பெருமாளாக்கும்..கலையில் வல்லவன் காங்கிரஸ்..

டெல்லியில் “வெங்காய விலை “ எகிறியபோது..உப்பையும் பதுக்கி வைத்து ஆட்சியை பிடித்த மாபாதகர்கள் காங்கிரஸார்..
மைனாரிட்டி நரசிம்ஹராவ்..எம்.பி.க்களை விலைபேசி எப்படி 5 ஆண்டுகளையும் ஓட்டினார் என்பதை நாடறியும்..
அதே மாதிரி எம்.பி.க்களை..விலைக்கு வாங்கிய படலத்தை மீண்டும் செய்து அமர்சிங்கை பலியாக்கி தான் தப்பித்தது……2 ஜியில் ராஜாவை பலியாக்கி தான் தப்பித்தது…..ஆந்திராவில் ஜகன் மோஹன் ரெட்டியை காலி செய்ய மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியையும் சி.பி.ஐ.புகாருக்குள் கொண்டுவந்து..அவரை அவமதித்ததும்…காங்கிரஸின் “சீர்மிகு..பார்புகழும்” கலாச்சாரம் ஆகும்..

இப்போது ஊழல் எதிர்ப்பு “போராளிகள்”..அரவிந்த் ஹெஜ்ரிவால்…பிரஷாந்த் பூஷன்”…ஆகியோர் மீது..அவதூருகளை அள்ளிவீசி..அரசு இயந்திரங்களை..ஏவிவிட்டு..அநாகரீக ..அசிங்க..அரசியலை மீண்டும் துவக்கியுள்ளது..காங்கிரஸ்..

காங்கிரஸின் இம்மாதிரியான “வலையில்” மோடி வீழ்வாரா?---”மாட்டார்” என்று சரித்திரம் சொல்கிறது..
அன்று ஆட்சி கட்டிலில் ஏறிய புதிதில்..அனுபவமே மெருகேதாத  பொழுதில்…..…”கோத்ரா” அம்புகளை..மானாவாரியாக வீசிய போழ்தும்……மீடியா உலகும்”—” "விலை நிர்ணயம்  செய்யப்பட்ட “ பத்திரிக்கை யாளர்களும்” ஒன்று திரண்டு தாக்கிய போதும்..…20வது ஷாவொலின் நிஞ்ஞ்சாவாக”..வெற்றியோடு வெளியே வந்தாரே மோடி….

அந்த சரித்திரம் இப்போது மீண்டும் திரும்பும்…ஹாரி பாட்டரின் கதைகளின்..ஜாலவித்தை புரபஸர் போல….வேதாளம் சொன்ன கதைகளில் விக்கிரமாதித்தன் போல…மீண்டுமொரு இமாலய வெற்றி மோடியிடம் வந்துசேர இருக்கிறது..

அந்த சுனாமி..இந்த ரால் வின்சி உத்தரகுமாரனை மட்டுமல்ல…உத்திரை…பிரியன்கா….. அரசி சோனியா… மாகாராஜா..காங்கிரஸ்..ஆகியோரை உருதெரியாமல் சிதைத்து..நடுக்கடலில் தள்ளப்போகிரது…ஆட்சி பறிபோய் காங்கிரஸ்…கும்பல் கொத்து கொத்தாய்….இத்தாலிக்கு வழியனுப்பி வைக்கப்பட காத்திருக்கிறது..  

1 comment:

ராஜ நடராஜன் said...

Font size குறையுங்கள்.

இதுவரையிலும் காங்கிரஸ் மத்தியில் வலுவாக இருப்பதன் காரணம் காங்கிரஸ் தவிர ஆட்சி செய்த ஜனதா,பிஜேபி போன்ற கட்சிகள் தங்களுக்கு தாமே குழி தோண்டிக் கொண்டதால் மட்டுமே.இனியும் அப்படியொரு வாய்ப்பை காங்கிரஸ்க்கு தருவார்கள்.ஆனால் அடுத்த ஆட்சியில் அல்ல.

மத்திய அரசியலில் அமர்சிங்கின் தில்லுமுல்லு அரசியல் மிகவும் பிரபலம்.எனவே காங்கிரஸை மட்டுமே குறை சொல்ல இயலாது.

ஆனாலும் பிபாசாவுக்கும்,அமர்சிங்குக்கும் இடையிலான உரையாடல் எப்படி பொதுவில் வருகிறது:)