Pages

Wednesday, September 7, 2011

அண்ணா...ஆவி அமுதா....கலைஞர்..பேசிய பேச்சு..டேப்..

நில அபகரிப்பு வழக்கில் ஒவ்வொரு “மாஜி””க்களாக உள்ளே போய்க்கொண்டிருக்கும் நிலையில்...தன்னையும் உள்ளே தள்ளிவிடுவார்களோ என கலைஞர் பயப்படுகிறார்.....திமுக கூடாரம் ஆடிப்போய் இருக்கிறது...

திமுக இரும்புக்கோட்டை...ஆட்டமுடியாது.....அசைக்க முடியாது.....என்பதெல்லாம்..பயத்தினால் வந்த ஜன்னி...உளறல்..
உள்ளாட்சித் தேர்தலுக்கு விருப்ப மனுக்குக் கூட உடன்பிறப்புக்கள் அறிவாலயதிற்குள் எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்கிற கவலை திமுக “பெருசுகளிடம்” வந்துவிட்டது..

ஜெயில்..ஜெயிலாகப்போய் ஆறுதல் கூறி..” டயர்ட் ‘ ஆனதால் ஸ்டாலின்கூட சிகிச்சையை காரணம் காட்டி லண்டன் பறந்துவிட்டார்..

தனியாளாக   கைவிடப்பட்ட கலைஞர்..பயத்தில்  “கேள்வியும் நானே--பதிலும் நானே “ எழுத்தில் போலிஸை எச்சரித்திருக்கிறார்.

கருணாவின்  இந்த மிரட்டல் பற்றிய ஒருமுழு  நீள நகைச்சுவை ---கற்பனை ---உரையாடல்......

சிலநாட்களுக்கு முன் காலமான அறிஞர் அண்ணாவின் வளர்ப்புமகன்...பரிமளம்...சொர்க்கத்தில் அண்ணாவை சந்திக்கும் போது கலைஞரின்  “ லேட்டஸ்ட் “ நிலமையை சொல்லி ( தேர்தல் தோல்விகள் )அவருக்கு ஆறுதல் சொல்லச்சொல்கிறார்.

கலைஞருடன் அண்ணா பேச “ ஆவி அமுதாமூலம்  “ ஏற்பாடுகள் நடந்தேரியது.....

“ ஆவி அமுதா “--நான் ( கர கரத்த குரலில் )..அண்ணா பேசுகிறேன்..என்ன தம்பி கருணாநிதி எப்பீடி இருக்க?...தேர்தல்ல தோக்கரது நமக்கு சகஜம் தானே தம்பி..இதுக்கு போய் அலட்டிகிறியே தம்பி..

கருணா---- என்ன பத்தி உங்களுக்கு நல்லா தெரியுமே அண்ணா..தேர்தல் தோல்விக்காக நான் கலங்குவேனா அண்ணா...11 ஆண்டுகாலம் எம்ஜிஆர்..என்ன தோக்கடிச்சுக்கிட்டே தான இருந்தார் ..அப்ப கலங்கினேனா...?அண்ணா..

அண்ணா---அப்புறம் ஏன் இப்ப கலங்குறீங்க..?

கருணா-----இந்தம்மா ஒவ்வொருத்தரா ..உள்ள புடுச்சு போடுது...அதுக்குக்கூட நான் கலங்குல..அண்ணா..

அண்ணா--.....பின்ன எதுக்கு...

கருணா......டெல்லி ..அம்மா...கனிமொழிய...புடுச்சு உள்ள ..போட்டுடுச்சு....

அண்ணா......ஒரு தடவ சட்டசபைல...கருத்திருமன்கூட கேள்வி கேட்டாரே...அந்தப்பொண்ணா....உள்ளபோற அளவுக்கு...அவ்வளவு பெரிய பொண்ணாயிடுச்சா...காலம்..ஓடுது பார்..

கருணா.....ஆமாண்ணா..அதுக்குக்கூட பெருசா கலங்கல...ரத்தபாசங்கிறதால..கண்ணுல கொஞ்சம் தண்ணி வந்துச்சு...தடுக்க முடியல்ல..

அண்ணா......பின்ன இப்ப ..அப்பிடி..என்ன ஆச்சு..

கருணா.......அந்தம்மா..கட்சில இருக்குற நண்டு.....சிண்டு... எல்லாம் சட்டமன்றத்துல பேசறான்....ஒரு 750 சதுர அடி நிலத்த நான் அபகருச்சுட்டேனாம்..என்னோட “ ரேஞ்சையே “..அவமதிக்கிறானே..ஆனாலும் கைது பண்ணிடுவாங்களொன்னு..பயமா இருக்கு..அண்ணா..

அண்ணா....நீதான் கல்லக்குடியில..ரயில்ல தலவச்சு படுத்தவனாச்சே..அதுக்குக்கூட ஒனக்கு ஒரு “ வீர வாள் “ நான் பரிசு கொடுத்தேனே..

கருணா.....அதேல்லாம் பழைய கத அண்ணா....2002 ல இந்தம்ம என்ன கைது பண்ணினப்ப கனிதான் என்ன கைத்தாங்கலா..கூட்டிட்டு போச்சு...இப்ப கைது பண்ணினா கூட்டிட்டு போக ஆளில்லையே அண்ணா ( கருணா “ ஓ “ வென்று வாய்விட்டு அழுகிறரார் )..

அண்ணா...ஏன் தம்பி..அழகிரி இருக்கான்..ஸ்டாலின் இருக்கான்...அவங்க இருக்கிறப்ப உனெக்கென்ன கவலை தம்பி...

கருணா..அவங்க இருக்கிறது தான் எனக்கு கவலை அண்ணா..அவங்களோட போக எனக்கு பயமா இருக்கு...அப்புறம் நாம பேசிக்க “ ஆவி அமுதா” வேண்டாம்னு..நாம நேரடியா பேசிக்க வெச்சுடுவாங்களோன்னு..பயமா இருக்கு..

ஆவி..அமுதா......தன் ஒரிஜினல் குரலில்.........கருணா ஸார்...அண்ணா ஆவி...” டிஸ்கனெக்ட் “ஆகிடிச்சு...ஒருவேளை நீங்க அங்க வந்தா அவருக்கு பாதுகாபில்லைன்னு...பயப்படரார்..போல..இருக்கு..
....


2 comments:

Ramani said...

இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாமோ என்
ஆவலைத் தூண்டிச் செல்லும் அருமையான
பதிவினைத் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 1

எஸ்.ஆர்.சேகர் said...

நன்றி..ரமணி ..அவர்களே