Pages

Saturday, September 25, 2010

தொண்டனுக்கு தூக்கு---தலைவிக்கு பல்லக்கு

தர்மபுரி மாவட்டம் இலக்கியபட்டியில் கடந்த 2000 ஆம் ஆண்டு  நடந்த பஸ் எரிப்பு சம்பவத்தில் கைதான 3  அதிமுக தொண்டர்களுக்கு உச்ச நீதி மன்றம் --மாவட்ட கோர்டின்  தீர்ப்பை உறுதி செய்து மரண தண்டனை கொடுத்திருக்கிறது

2000 ஆம் ஆண்டு கொடைக்கானல் ஓட்டல் வழக்கில்  அதிமுக தலைவி ஜெயலலிதாவிற்கு கோர்ட் தண்டனை வழங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகமெங்கும் பஸ்களை  தீயிட்டு கொளுத்தினர். உல்லாசப்பயணம் சென்ற கோவை விவசாயக் கல்லூரி மாணவியர் சென்ற பஸ்ஸை தர்மபுரி மாவட்டம் இலக்கியப்பட்டியில் அதிமுகவினர் தீயிட்டு கொளுத்தினர். விளைவு மூன்று மாணவியர் தீயில் வெந்து மாண்டனர்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கி தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. இதில் தண்டிக்கபட்டவர்கள்--ஏற்கனவே குற்றவாளிகள் இல்லை. கட்சியின் சாதாரண தொண்டர்கள். அம்மாவின் ஆணையை ஏற்று--அம்மாவிடம் விசுவாசத்தை காண்பிக்கவேண்டி--- இப்படியொரு மாபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர்.விளைவு அவர்களுக்கு தூக்கு.அம்மா இன்னும் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். தொண்டன் தூக்கில்--அம்மா பல்லாக்கில்--

பொது சொத்திற்கு சேதம் விளைவிப்பதை எந்த கட்சியும் நிறுத்திய பாடில்லை.   கலைஞர் கைது செய்யப்பட்ட போது தமிழகத்தில் ரத்த ஆறு ஓடியது. பஸ்கள் எலும்புக்கூடானது. தொண்டன் தீக்குளித்து மாண்டான். கலைஞர் குடும்பம் ஹாயாக இருந்தது. தினகரனில் மு..க. அழகிரிக்கு முதல்வராக ஆதரவில்லை என்று  கருத்துக்கணிப்பு வெளியானது.--மதுரை நகரமே தீயில் கொழுந்து விட்டு எரிந்தது. தினகரன் ஊழியர்கள் மூவரும் எரிக்கப்பட்டனர். மாறன் சகோதரர்கள் வீரவசனம் பேசினர். குடும்பதுக்குள் குழப்பம் தீர்ந்தது--எரிந்து பிணமானவர்கள் குடும்பதின் வயிறு எரிந்ததுதான் மிச்சம்-அழகிரி மீது வழக்கில்லை.

பாமக.ராமதாஸ் நடத்திய போராட்டங்களில் மரங்கள் பலியாயின. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன.திருமாவளவன் கைதுக்கும் எலும்புக்கூடான பஸ்கள் எத்தனையோ--போது சொத்துக்கு நாசம் விளைவிப்பதில் தமிழக கட்சிகள் போட்டிபோடுகின்றன.இறுதியில் வழக்குகளை சந்தித்து கோர்ட் வாசல்படியில் வாழ்க்கை முடியும் தொண்டர்களே ஏராளம்.

தூண்டிவிட்ட தலைவர்கள் தப்பித்து விடுகின்றனர்--தா.கிரிட்டிணன் கொலையில் --தினகரன் ஊழியர்கள் எரிப்பில்--மு.க.அழகிரிக்கு எந்த தண்டனையும் இல்லை--இந்திரா காந்தி கொலைக்குப்பின் டெல்லியில் சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் ஜகதீஷ் டைட்லர் தப்பிக்க வைக்கப்பட்டார்--தண்டனை இல்லை.மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதில் ராமதாஸ் மீது வழக்குகள் இல்லை--

தர்மபுரி பஸ் எரிப்பில் தூண்டிய “”சிறுதாவூர் சிங்காரி” ஜெயலலிதாமீது “”திருவாருர் தீயசக்தி””வழக்கு தொடரவில்லை--அம்புகள் மட்டுமே தூக்கை முத்தமிடுகின்றன--

வில்லாதிவில்லன்கள்--------
இன்னும் பல்லக்கிலே பவனி வந்துகொண்டிருக்கின்றனர்.

No comments: