Pages

Sunday, September 26, 2010

மொள்ள மொள்ள குறையுது—தண்ணீர்— அள்ள அள்ள கரையுது --- மின்சாரம்

என்னத்த எழுத—பெரிய சப்ஜெட் ஆச்சே---முயற்சி பண்ரேன்.---

சம்சாரம் இல்லாமல் இருந்தாலும் வாழலாம்—மின்சாரம் இல்லாமல் வாழமுடியாது—பழகிவிட்டோம்---.வசதிகள் பெருகியது—வாய்ப்புக்கள் உருவானது—அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம்—விடமுடியவில்லை—இனி முடியாது.—அப்படியா.?

மின்சாரம்----வீட்டில், தொட்டது, பட்டது,  விட்டது,  கெட்டது,எல்லாம் மின்சாரம்—
வெய்யிலில் சூட்டை குறைக்க,…குளிரில் சூட்டை நிறைக்க—ஆஸ்பத்திரியில்,..அலுவலகத்தில்,…தொழிற்சாலையில்,..ரோடு,..போர்டு,..கோடு,…ஆல் இன் ஆல் அழகு ராஜா மின்சாரம்.
இது இல்லாமல் மக்கள் படும் பாடு—தொழில்கள் படும் பாடு—இது குறைந்தால் கட்சிகள் படும் பாடு—
இதற்குத்தான் உலகமுழுதும் இன்று ஹை டிமாண்ட்
அதிகம் வைத்திருக்கும் அரபுக்காரனுக்கெல்லாம் ஏக குஷி—அவர்கள் காட்டில் மழை—வறண்ட பாலைவன காரனிடத்தில் இன்று பண மழை.

ரஷ்யா..சைபீரியாவில் உள்ள எண்ணைக் கிணறுகளை “தொடாமல்” பாதுகாத்துவருகிறது.---பிற்காலத்திற்காம்..
உலகின் 4 சதவீதம் மக்கள் தொகையுள்ள அமெரிக்கா, உலகின் மொத்த வசதியில் 24 சதவீதத்தை அனுபவிக்கிறது…  எதிர்கால “எனர்ஜிக்கு “”ஆலாய் பறக்கிறது…
வளர்ந்த நாடுகள் “”மாற்று எரிபொருளை”’ தேடிவருகிறது.
சீனா  இப்போதே இன்னும் 20 ஆண்டுகளை நோக்கி சிந்திக்க தொடங்கிவிட்டது.   “சோலார் எனர்ஜி—சோலார் செல்—சோலார் பவர் “”என திட்டங்கள் தீட்டி எங்கோ போய் விட்டது.

இந்தியாவில் குஜராத்தை தவிர எந்த மாநிலமும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. எல்லா இடத்திலும் பவர்—கட் நிலைதான். தொலை நோக்கு பார்வையில்—சிந்திக்க தலைவர்கள் பஞ்சம்—    ””வந்தது வரட்டும் –அப்புறம் பார்த்துக்கலாம் “” இப்படித்தான் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. கிடைக்கும் பெட்ரோலியம் முழுவதையும் “ரிலையன்ஸ்ஸுக்கே” தாரை வார்த்துவிட்ட காங்கிரஸ்—
நம்ம நிலமை ரொம்ப கவலைக்கிடம்.

ஒரு நாற்பதாண்டுக்கு முன்பு இவ்வளவு மின்வசதி இல்லை—அதனால் ஏ.சி..பிரிட்ஜ்..வாஷிங் மெஷின்..இல்லை--”கன்ஸூமரிஸம்” இல்லை.அதனால் தேவைக்குமேல் பொருட்களை “”அடைத்து குவிக்கும் “”பழக்கம் இல்லை..ஓலை கை விசிறி..பரண், குதிரில்,,காய்கள், நெல் பராமரிப்பு என இயற்கையோடு இணைந்த வாழ்க்கை..பூமித்தாயை வேகமாக சுரண்டி அனைத்தையும் அள்ளும் மனோபாவம் இல்லாமல் இருந்தது..

எங்கள் கிராமம் கொத்தங்குடியிலிருந்து நாச்சியார் கோயிலுக்கு 5 கல் தொலைவு நடந்தோ மாட்டு வண்டியிலோதான் போவோம்..திருமலை ராசனாரைத் தாண்டி நல்லாடை தார் ரோட்டுக்குப் போனால் பஸ் வரும். பொது போக்குவரத்துத்தான்..பெட்ரோலியம் செலவு குறைவு.

இப்படியெல்லாம் எழுதுவதால் கற்காலத்தை நோக்கி போகச் சொல்லும் சிந்தனையா இது. அல்ல—அல்லவே அல்ல.
என் நண்பர் “ஓசை செல்லா” மலைவெளிகளில் சாலை மைத்து தங்குகிறார்..”சோலார்..செல்லில்””எல்.சி.டி.—விளக்கில் படிக்கிறார்..300 ஆண்டுகள்வரை அழியாமல் பூமித்தாயை மலடியாக்கும் டிட்டர்ஜெண்ட்டை பயன்படுத்தாமல் இயற்கை வழிகளில் துணி துவைத்து, சோப்பின்றி கடலை மாவு போட்டு குளிக்கிறார்.—

நம் மகன் -மகளுக்கு பணம் சேமிக்கிறோம்—நகை சேமிக்கிறோம்—தண்ணீர்—மின்சாரம் சேமிக்க வேண்டாமா? எல்லாவற்றையும் நாமே காலி செய்துவிடுவதா? வரும் சந்ததி வறட்சியில் வாடவேண்டுமா?—மிரட்சியில் வீழவேண்டுமா?

--

No comments: