Pages

Wednesday, September 22, 2010

வல்லபாய் பட்டேலே வருக--சிதம்பரமே செல்க

இந்திய அரசமைப்பு சட்டம் உருவானபோது ஒரு முக்கிய விவாதம் நடந்தது. அமெரிக்கா போன்று “”பெடரல் “”அமைப்பா?--அல்லது ஒருங்கிணந்த இந்தியாவின் “”சமஷ்ட்டி ஆட்சிமுறையா?””--union--

அமெரிக்கவில் பெடரல் அமைப்பில் உள்ள மாநிலங்கள்--எப்போதுவேண்டுமானாலும் பிரிந்துபோகலாம்--புதிதாகவும் வந்து சேரலாம்--இக்காரணத்தால் இது இந்தியாவுக்கு ஒவ்வாது--என பெடரல் முறையை கடுமையாக எதிர்த்தவர் பாபா சாகிப் அம்பேத்கார் அவர்கள்.

பிரிந்துபோகும் எண்ணமே வரக்கூடாது என்பதற்காகத்தான் “”இந்திய யூனியன்--யூனியன் ஆஃப் இந்தியா “”---என்ற வாசகங்கள் அரசமைப்பு சட்டதில் சேர்க்கப்பட்டது. 63  ஆஅண்டுகள் கழித்து இந்தியாவிற்கு ஒரு நிலை காஷ்மீர் மூலம் வந்துவிடுமோ என்ற ஐயத்தில் அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்திருக்கிறார்.

தற்போதைய காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்துபோகவேண்டும் என்பதை முன்நிறுத்தியே காஷ்மீர் கலவரங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை “தாஜா” செய்யவே சிதம்பரம் அண்டு கோ காஷ்மீரில் அவர்களை தனித்தனியாக சந்தித்திருக்கிறது.

ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்வோம்---தமிழ்நாட்டிலும் சரி--ஏன் அகில இந்தியாவிலும் சரி--ஏதாவதொரு மாநிலத்தில் பிரிவினை கோரி ஒரு கட்சியோ ---ஒரு தலைவரோ அறிக்கை வெளியிட்டாலே அவர்கள் நிலை என்னவாகும்---ஆயுள்முழுதும் சிறைவாசம்தான் --

ஆனால் காஷ்மீரில் சோனியா அரசு பிரிவினைவாதிகளின் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.சிதம்பரம் பிரிவினைவாதிகளுக்கு அறிவுரை வழங்குகிறார்.இந்தியாவோடு இருப்பதுதான் அவர்களுக்கு நல்லதாம்--இப்படி காலில் விழாதகுறையாக கெஞ்சுகிறார்.

70 ஆண்டுகளுக்குமுன்பு முகமது அலி ஜின்னாஹ் இப்படித்தான் பிரிவினைகோரினார்..பிரிவினைகோரி நாட்டையே ரத்தக்காடாக்கினார்--நாட்டை பிரிப்பது என்பது ஒரு மாபெரும் முட்டாள்தனம்-- PARTITION IS A FANTASTIC NON-SENSE --என்றார் நேரு..தேசப்பிரிவினை என்பது என் சவத்தின் மீதுதான் நடக்கும் என்றார் மகாத்மா காந்தி.--நாடு துண்டாடப்பட்டபோது இருவரும் கையெழுத்துப் போட்டார்கள். அதே முஸ்லீம் லீக்கோடு அதே காங்கிரஸ் இன்று கூட்டு சேர்ந்துள்ளது. அன்று முஸ்லீம்களை தாஜா செய்தது போல இன்றும் காங்கிரஸ் --நேற்று---காஷ்மீரில் -- பிரிவினைவாதிகளை வீட்டுக்கே சென்று நேரில் சந்தித்துள்ளது..

அனைத்துக் கட்சி கூட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக தன்னிச்சையாக சிதம்பரம் இந்த முடிவை எடுத்துள்ளார். சந்திப்பு முந்தவுடன் பிரிவினை வாதிகள் இன்னும் அதிக “”தெனாவெட்டோடு “” பேசுகிறார்கள். 70 ஆண்டுகளுக்குமுன் ஜவஹர்லால் நேரு தலமையிலான காங்கிரஸ் செய்ததையே அவரது பேரனின் மனைவி சோனியாவின் தலைமயிலான காங்கிரஸும் செய்கிறது..

1947 க்கு பிறகு பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்கள் இன்னும் காஷ்மீரத்தில் அகதிகளாக வாழ்கின்றனர்.அவர்களுக்கு காஷ்மீர் மக்களுக்குள்ள எந்த உரிமையும் கிடையாது. பல ஆண்டுகளுக்குமுன்பு வன்முறையாளர்களாலும் பிரிவினைவாதிகளாலும் அடித்துவிரட்டப்பட்ட “”காஷ்மீரத்து பண்டிட்கள்””இன்னும் இந்தியாவெங்கும் அகதிகளாக திரிகிறார்கள். அவர்களை காஷ்மீரில் குடியமர்த்த இவர்கள் கவலைப்படவில்லை. சிதம்பரம் இவர்களோடு பேச்சு நடத்தவில்லை. ஆனால் பிரிவினை வாதிகளை “”தாங்கு..தாங்கு என்று “”தாங்குகிறார்.

அமைதியாக நடக்கும் ஊர்வலங்களில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துகிறது--எங்களை கொன்று குவிக்கிறது--இப்படி சிதம்பரம் அண்டு கோ விடம் மனு கொடுக்கப்படுகிறது. கருணாநிதி எப்போதும் சொல்லுவாரே அதுபோல ஒரு ஒப்பீடு செய்து பார்த்தோமேயானால்---உத்திரப்பிரதேசம்--பிஹார் போன்ற மாநிலங்களில் நடக்கும் போலிஸ் துப்பாக்கி சூட்டைவிட வன்முறை சூழ்ந்த காஷ்மீரில் துப்பாக்கி சூடு மிகக் குறைவே--வன்முறையாளர்களின் உயிர்ப்பலியும் குறைவே.

காஷ்மிர் மக்கள் தொகையில் 60 சதம் பேர் 25 வயதிற்கு குறைந்த இளைஞர்களே..இவர்களை பிரிவினை வாதிகள் மூளைச்சலவை செய்து வன்முறையில் ஈடுபடுத்துகின்றனர். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பணமும் ஆயுதமும் பெருமளவில் சப்ளை செய்கிறது. போதாக்குறைக்கு தற்போது சென்ற அனைத்துக் கட்சி “”டீமும்”--பா..ஜ.தவிர--பிரிவினையாளர்களை போட்டி--போட்டு “”தாஜா” செய்துவிட்டு வந்திருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினை தீர இன்றைய தேவை--வல்லபாய் பட்டேலே--சிதம்பரங்கள் அல்ல.     

No comments: