Pages

Sunday, September 19, 2010

தீர்ப்புகளில் திருத்தம் வருமா--அல்லது---தீர்ப்புகளால் திருத்தம் வருமா

””   249 வீடுகளில் திருட்டு போயிருக்கிறது---இதுவரை 56 பேர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.---பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்--கவலை வேண்டாம்--நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் ( திருடர்கள்--கொலைகாரர்கள்--என்று குறிப்பிடக்கூட அச்சசம் ) பிடிபடுவார்கள். அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்--( தண்டனை பெற்றுத்தருவோம் என்று சொல்லக்கூட அச்சம் ). ஒரு வேளை கோர்ட் தீர்ப்பு “ஒரு மாதிரியாக “ வந்தால்கூட --அது சட்டதின் நடைமுறைதான் -யாரும் கவலைப்படவேண்டாம்--பொறுமை காக்கவும். அதற்கு மேல்முறையீடு செய்யக்கூட வழியிருக்கிறது..என்பதை நினைவு படுத்தவிரும்புகிறேன்.”””

இப்படி நம்மூர் போலிஸ் கமிஷனர் அறிக்கை வெளியிட்டால் எப்படி இருக்கும்--இதற்கும் 16 ந்தேதி நமதுநாட்டின் பிரதமர் மன்மோஹன் சிங் வெளியிட்ட பத்திரிக்கை விளம்பர செய்திக்கும் என்ன வேறுபாடு?

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக நாட்டின் பெரும்பான்மை மக்களும்--ராமர் கோயில் இடம் மசூதிக்கே சொந்தம் என முஸ்லீம் தரப்பும் சொல்கின்றனர்.--இருக்கக்கூடிய ஆதாரங்களை வைத்து அரசே தீர்ப்பு சொல்லியிருக்கலாம். அப்படி தீர்ப்பு சொல்ல அரசுக்கு “”முதுகெலும்பு “” இல்லை. எப்படி தீர்ப்பு சொன்னாலும் ---ஆதாரங்களை வைத்து சொன்னாலும் --அநியாயமாக சொன்னாலும்---ஆளும் கட்சி ஒரு தரப்பை பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதைவிட முக்கியம் “”ஓட்டு வங்கியை””இழக்கவேண்டியிருக்கும்.

சரி--ஒருவேளை ஓட்டு வங்கியை இழக்காமல் தீர்ப்பு சொல்லமுடியுமா?--முடியாது.--அதிக பட்சம் தீர்ப்பை தள்ளித்தான் போடமுடியும்.. அதற்கு இப்போது சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.

சரி--தீர்ப்பு எப்படி வந்தாலும் --நாட்டின் இறையண்மைக்கு சவால் விடும் சம்பவங்கள் நடந்தால்---அதை தடுக்கும் --தைரியம்--தில்லாவது அரசுக்கு வேண்டும்....அதுவும் இல்லை--சட்டம் ஒழுங்குக்கு சவால் விடப்பட்டால்---””இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன் “”--என்றாவது சொல்லவேண்டும்---அதோடு நிறுத்தாமல் “”செய்யவேண்டும் “”--சொல்லவே முடியாத அரசால் எப்படி செய்யமுடியும்?--

தீர்ப்பு சட்டத்தின் ஒரு நடைமுறையாம்--அதற்க்காக யாரும் அஞ்சவேண்டாமாம்---மேல்முறயீடு உண்டாம்---யாருக்கு சொல்கிறார் பிரதமர்?---எதோ பஞ்சாயத்து செய்பவறை போலல்லவா பேசுகிறார்.சட்டத்தையும் போலிசையும் தன்கைய்யில் வைத்துள்ள அரசு தீர்ப்பைக்கண்டு ஏன் இவ்வளவு பயப்படவேண்டும் ?--இவ்வளவு என்பதைவிட --யாரைக்கண்டு இவருக்கு பயம் ?--சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியாது என்றால் இவருக்கு ஏன் பிரதமர் பதவி?--

24 ந்தேதி தீர்ப்புக்காக நாடுமுழுதும் “”பாதுகாப்பு “”என்ற பெயரில் போலிஸ் பந்தோபஸ்த்து பலப்படுத்தப் பட்டு வருகிறது.--பல ஊர்களில் “”சமாதான கமிட்டி “”கூட்டம் போலிஸால் கூட்டப்படுகிறது---அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க இந்த ஏற்பாடாம்---விநோதமாக இருக்கிறதல்லவா?---இந்த சூழலுக்கு யார் காரணம்?--இந்த சூழல் ஏன் ஏற்பட்டது?

சட்டத்தின் முன் அனைவரும் சமம்--யார் தவறு செய்தாலும் தண்டனை உறுதி--என்ற நிலப்பட்டை அரசு எடுத்திருந்தால் இதுமாதிரி அறிக்கைகளுக்கு அவசியம் ஏற்பட்டிருக்குமா?--பார்லிமெண்ட்டை தாக்கிய அப்சல்குருவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையையே இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை--அரசு தன் பலவீனத்தை “”தண்டோரா “”போடாமலே வெளிப்படுத்திவருகிறது.  ஒருவேளை அப்சல்குருவுக்கு பதிலாக “கோவிந்த பாஸ்கர ரெட்டி “குற்றவாளியாக இருந்திருந்தால்--இந்த அரசு தண்டனையை நிறைவேற்றியிருக்குமோ?

எது எப்படியோ---இந்த அரசின் செயல்பாடுகளால் காஷ்மீரம் இமயமலைக்கு பக்கத்திலிருந்து எரிந்து கொண்டிருக்கிறது---இந்த தீர்ப்புக்கு பிறகு நாட்டையே காஷ்மீராக்காமல் இருந்தால் சரி.

No comments: