Pages

Monday, September 20, 2010

காலமே--கவலைகளை கரைக்கும்-- ஜாலமே

அறுபது வயதானவருக்கு அப்பா இருக்கலாம்
ஆறு வயதிலேயே அப்பாக்கியமும் நழுவலாம்
கரு உருவானதோடு சரி பெற்றோரை
போட்டோவில்  பார்க்கவே அவனுக்கு பாக்கியம்
 
பத்திரிக்கையிலே ஒரு போட்டோ
குடும்பமே விபத்தில் பலி
அப்பாவும் அம்மாவும் அருகருகே நிற்க
இடையிலே குழந்தைகள் என்ன கோரமிது

மலர்ந்தது போடவில்லை உதிர்ந்தது ஒரேநாளாம்
ஓடியது நாட்கள் மாதங்கள் ஆண்டுகள்
இதயத்தின் கனங்கள் காலத்தால் கரைந்தது
கவலைகளை கரைக்கும் காலத்தை வணங்குகிறேன்

அதிகாரியிடம் அவமானப்படும் ஊழியர்
அண்ணனிடம் அடிபடும் தம்பி
உற்றாரின் உரசலால் நொந்துபோன சொந்தம்
உண்மையான தொண்டனுக்கு கட்சியிலே பங்கம்

உதிரத்தைஉள்ளத்தில் கொட்டவைத்த நிகழ்வுகள்
தீப்பட்ட புண்போல மாறாத வடுவாக
நாட்பட்ட நோய்போல தீராத வலியாக
ஆறாத ரணங்களை ஆற்றுகின்ற அருமருந்தே

காலமே நீ இல்லாவிட்டால் நாங்கள்
காற்றினிலே கரைந்து போயிருப்போம்
கவலைகள் துயரை அவமானத்தை
ஆற்றுகின்ற அருமருந்தே காலமே---வணங்குகிறேன்