Pages

Sunday, November 7, 2010

நேற்றைக் கொன்றுவிடு...இன்று வாழ்ந்து விடு

நேற்றை..விட்டு விடு..இன்று வாழ்ந்து விடு


நேற்று பயங்கரமான நாள்---கொல்லப்பட்டுவிட்டது---இயற்கை மரணமடைந்தது--செத்துப்போச்சு--எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும்

மகிழ்ச்சி --சந்தோஷம்--இன்பம்--ஆதங்கம்--துக்கம்--துன்பம்--உணர்வுகளின் பல்வேறு பரிமாணங்கள்--நிலைப்பாடுகளுக்கு ””நேற்றே””-- பெரும் காரணம்..
நேற்றைய தீபாவளி.....இதற்கு விலக்கு இல்லை..நேற்றைய வீடும்..நாடும்..உலகமும் இதற்கு விலக்கு இல்லை..

நம் அப்பாவழிப் பாட்டி அம்மாவுக்கு செய்த விஷயங்களும்...அம்மாவழிப் பாட்டி சித்தி..மாமிகளுக்கு செய்த விஷயங்களும்..எதிர்வீட்டு..பக்கத்து வீட்டுக் காரர்கள்..பள்ளி..கல்லூரி நண்பர்கள்..அலுவலக..வியாபார தோழர்கள்..செய்த நல்லது..கெட்டதுகள்...நமது “”இன்றய நாளை “”..பாதிக்கிறது..சந்தோஷிக்கிறது
பெரும்பான்மையான சமயங்களில்..துக்கப்பட வைக்கிறது..

மாமியார்கள் நேற்றைக்கு மருமகளாக இருந்திருக்கிறார்கள்....அம்மாக்கள்..நேற்றுவரை மகளாக இருந்திருக்கிறார்கள்..."ROLE"--மாறும்போது..புதிய “ROLUKKU"..தான் தயாராகிறார்களே தவிர..வாழ்க்கை பழைய “ரோலில்” இருந்து கற்றுக்கொள்ளப் படுவதில்லை..

சேர..சோழ..காலத்தில் சமணர்களோடு..சைவர்களுக்கு பிணக்கிருந்ததாம்....முகலாயர்களின் வரவில் அவுரங்கசீப் ஆட்சிகாலம் கடுமையாக விமர்சிக்கிப்பட்டது...பிரிட்டிஷ்காரர்களின் வரவு --சரித்திரம்..இன்னும் கண்முன்னே நிற்குமாறு நம் தகவல் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது..
இப்படி நடந்து முடிந்தவைகள்..சரித்திரம்..இவை வீடாயினும்..நாடாயினும்..நெஞ்சில் சுவடாக பதிகிறது...

அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கு ..ஆப்கானிஸ்தானில் திட்டமிடப்படுகிறது...சீனாவில் நடக்கும் சம்பவத்திற்கு பாக்கிஸ்தான் பாசறையாக பயன்படுத்தப்படுகிறது..நேற்றைக்கு நடந்தவைகளுக்கு.......  ‘’இன்று”----பழிவாங்க..பதிலளிக்க...பரிகசிக்க..பதட்டமடைய வைக்க...”தயாராக்கப் படுகிறது “”..அல்லது “”பயன்படுத்தப் படுகிறது “”

மனிதன் ஒன்றும் உணர்வில்லாத மிருகமில்லை--அவமானங்களுக்கும்..அவமதிப்புக்களுக்கும்..பதில் கொடுத்துத்தான் ஆகவேண்டும்--இது ஒரு வாதம்
நேற்றைய “அநீதிகளை””மறந்து..இன்றையதை””..தொடங்க வேண்டுமென்றால்..நாம் மானமற்ற..உணர்வற்றவர்களா?...இதுவும் ஒரு வாதம்

இவை நமக்கு புகட்டப் பட்டது..சொல்லப்பட்டது..படித்து தெரிந்து கொண்டது..

புதைக்கப்பட்டவர்களை தோண்டியெடுத்து--மீண்டும் அழுவது..நம்..””ரியல்””வாழ்வில் செய்வதில்லை.
இறக்கப் போகின்ற “”நாளைக்காக””...முன்னமே குழிதோண்டி வைப்பதையும் “ரியல்” வாழ்வில் செய்வதில்லை.

சரித்திரங்கள் விஷயத்திலும்..மனித உறவுகளிலும்..நாம் ஏன் பிணங்களை (நேற்றை) தோண்டியெடுத்து அழுகிறோம்..என்பதும்
நாளை..நடக்கப் போவதாக எண்ணி..சொல்லி...””இன்றை”” “குழிவெட்டுகிறோம்”” என்பதும் நல்லதா.... எனக்கு தெரியவில்லை---உங்களுக்கு..?

1 comment:

நிகழ்காலத்தில்... said...

நேற்றையும், நாளையையும் மனதில் வைத்துக்கொண்டு இன்றை குழிவெட்டிப்புதைப்பது நல்லதல்ல

என அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்

வாழ்த்துகள் நண்பரே