Pages

Tuesday, November 2, 2010

தண்ணி குடுப்பா------- ஆகுற..வேலய பாருங்கம்மா----------

தண்ணி குடுப்பா-------
ஆகுற..வேலய பாருங்கம்மா----------
நாம கேக்குறது…..குடிதண்ணீர்
ஐய்யா குடுக்கிறது……””குடி””..””தண்ணி””

முல்லைப் பெரியாரில் 6 அடி “டாம்”. உசரத்தை கூட்டினால்----என்ன பெரிய மாற்றம் வந்திடும்…
“டாமின்” கொள்ளவு 441 மிலியன் கனமீட்டர் தண்ணீர்—
6 அடி உயர்த்தினால்  இன்னும் 19 மிலியன் கன மீட்டர் தண்ணரீர் உயரலாம்—கிடைக்கலாம்….மழை பெய்தால்..
இதுக்கு எத்தன நாளா சண்டை---எவ்வளவு பணம்..நேரம்…விரையம்—மாற்று ஏற்பாடு பற்றி சிந்தித்திருந்தால்..இந்நேரம் செயல் படுத்தியிருக்கலாம்—நினைத்த தண்ணீர் கிடைத்திருக்குமே

கவிரி நீர்த்தாவா –1972 இல் தொடங்கி இன்றுவரை நடக்கிறது..
முதலில் நமக்கு 489 டி.எம்.சி..அவர்களுக்கு—277tmc
இப்ப நமக்கு 205—கர்னாடகாவுக்கு 465—மழபெஞ்சு அவங்க ஊர்ல வெள்ளம் வந்தா நமக்கு தண்ணி வரும்—இல்லாட்டி…தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம்…தினசரி போராட்டம் நடத்தலாம்…48 வருஷமா போராட்டம் மட்டுமே நடத்திக்கிட்டு இறுக்கோமே—மாத்து ஏற்பாடு பத்தி சிந்திச்சோமா?---

பாலாறு தண்ணீருக்காக போராட்டம்---
நந்திதுர்க்கா மலையில் உருவாகி—கர்னாடகாவில் 90 கி.மீ—ஆந்திராவில் 33 கி.மீயும் தமிழ்நாட்டில் 222 கி. மீயும் நதி—அதாவது நதிக்கான பாதை இருக்கிறது—தண்ணீர் இல்லை..
எப்படி இருக்கும்.. அதான் தண்ணியே கொஞ்சம்தான் -அதுவும் அவர்கள் மாநிலத்திலேயே உறிஞ்சி விடுகிறார்கள்.

ஆக நடக்காத..நடக்கமுடியாத..இந்த ஆற்றுத்திட்டங்களுக்காக போராடுகிறார்கள்—நம் மதிப்பை இழந்த லீடர்கள்—இவை இல்லாவிட்டால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காதா---மாற்றுத்திட்டங்களே இல்லையா—மாற்று வழிகளே இல்லையா
தினசரி..காலைல எழுந்திரிச்சா—அறிக்கை—பதில் அறிக்கை—முல்லைப் பெரியார் தண்ணி கொடு—பாலாற்றில் அணை கட்டாதே—காவிரி நீருக்கு கடிதம்—கடிதம்—தொடர்ந்து கடிதமோ கடிதம்..வெறுத்துப் போச்சு..

டாஸ்மாக்கில் கொட்டிய பணத்தை—இலவச டி.வி.யில் கொட்டிய பணத்தை—மற்ற இலவசங்களில் கொட்டிய பணத்தை---நதிகள் இணைப்பில் கொட்டியிருந்தாலோ—மழைநீர் சேமிப்பில் கொட்டியிருந்தாலோ—குளங்களை தூர்வாருவதில் கொட்டியிருந்தாலோ—மற்றவர்களிடம் தண்ணீர் எதிர்பார்த்து நாம் கொட்ட..கொட்ட விழித்திருக்க வேண்டாமே..

கொட்டினது உண்மைதான் -ஆனால் கொட்டிய இடம்தான் வேற—இவங்க வீட்டு கொல்லைல உள்ள ரகசிய குழிகள்ளயும்--—வெளிநாட்டு வங்கிகள்ளயும் கொண்டு கொட்டினா மக்களுக்கு எப்பிடி தண்ணீர் கிடைக்கும்.

இனி இவைகளுக்காக எந்த கட்சி போராட்டம் நடத்துனாலும்---எந்த பத்திரிக்கையும் பிரசுரிக்கக் கூடாது—மக்கள் கவனிக்கக் கூடாது—

எலக்‌ஷன் வந்துட்டதால அம்மா கத்துராங்க—அறிக்கை வெளியிடராங்க—ஐய்யா மீண்டும் ..மீண்டும் கடிதம் எழுதுராங்க—நாம நம்ம வேலைய காட்டுவம்—சரியா ஓட்டுப் போடுவம்—சரியான ஆளுக்கு------- என்ன சரியா?

--


1 comment:

R VENKATESH said...

என்ன ஒரு கருத்து!!!! என்ன ஒரு கருத்து!!!! சும்மா சொல்லக்கூடாது உண்மையில் வயதும் அனுபவமும் எப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது பாருங்கள்.சேகர் அண்ணா பிச்சுட்டேள் போங்கோ