Pages

Friday, December 24, 2010

மூஞ்சப்பாரு----எவண்டி உன்னப் பெத்தான்




”மூஞ்சப்பாரு
எவண்டி ஒன்னப்பெத்தான்
ஏங் கைல கெடச்சா செத்தான்”

இன்று காலை எப்போதும் போல நடைபயிற்சி மேற்கொண்டேன் --நேரத்தை பிரயோஜனமாக செலவழிக்க “ஐ..பேடை””--காதில் மாட்டிய போது சூரியன் பண்பலையில் (எஃப்.எம் )ஒலித்த  புதிய ”பொறநாநூறு””-----”அலிங்கத்துப்பரணி”--இது

அப்பப்பா--என்ன சொல்லாட்சி---கருத்துக்கருவூலம்---வார்தை பிரவாகம்---தமிழின் ஆழம்--

ஏதோ ஒரு புதிய “சினிமா”விலிருந்து ஒரு ஆண் பாடகர்---காதலி வருணனையா?--தகப்பன் நிந்தனையா?---மனச்சிதறல் நோய்கண்டவனின் -தொண்டை கிழியும் கத்தலா?---  என்ன பாடல் வரிகள்--என்ன அர்த்தம்--(இப்படி ஒன்று இருந்தால் ..)

ஆங்கிலத்தில் இரண்டு அழகான வார்த்தைகள்--ஒன்று--GROWTH---2--DEVELOPMENT--

GROWTH--எனில் வளர்ச்சி
DEVELOPMENT-- எனில் முன்னேற்றம்

வளர்ச்சி--உயிர் உள்ளவைகளின் உடன் பிறந்தது
வயதாக ஆக வளர்கிறோம்
மரமும்--மனிதனும் கூட..வளர்கிறது

தமிழ் வளர்கிறதா?--எங்கே வளர்கிறது?---
சங்க இலக்கியம் சரிந்துபோய்--
சென்னை பாஷையில் சீரழிந்து---சூரியன் பண்பலை ( பண்பலையா--பண்பற்ற அலையா? )---தொடங்கி--அத்தனை எஃப்.எம்.களும்--அதற்குமேல் டி.வி. தொகுப்பாளியினிகள்...வாயில் ரோடு ரோலர்களில் சிக்கிய கருங்கல்லாக அரைபடுகிறதே--தமிழ்-- அதுதான் வளர்ச்சியா?

இந்த வளர்ச்சியின் வெளிப்பாடுதான் -”மூஞ்சப்பாரு---ஒன்ன எவண்டி பெத்தான்””---போன்ற--”சங்கை கலக்கிய “--( சங்க இலக்கிய அல்ல )பாடல்கள்.

மண்சாலை--தார் சாலை ஆனால் முன்னேற்றம்----படிக்காதவர் வீட்டுப் பைய்யன் டாக்டர் ஆனால் முன்னேற்றம்---அரிவாளை தூக்கியவர்கள்--எழுதுகோல் பிடித்தால் முன்னேற்றம்..
சங்கத்தமிழை ----சாதாரண தமிழனையும் படிக்கவைத்தால் முன்னேற்றம்---தமிழை உலகநாடுகளின் ஒப்பற்ற மொழியாக்கி--ஐ.நா சபையின் ஆட்சி மொழியாக்கினால் முன்னேற்றம்--

அமுதமெனும் தமிழில்--”மூஞ்சப்பாரு”---போன்ற “நஞ்சை”--கலப்பதுதான் -முன்னேற்றமா?

எந்த ஒரு மனிதனும் தானாக விரும்பி உயிர் விடுவதில்லை --
எந்த ஒருமொழியும் தானாக ----தன்னில் மாற்று மொழியை கலப்படம் செய்துகொண்டு---தலை கிறுகிறுத்து சாவதில்லை..

ஆனால் தமிழ் சாகிறது--சாகடிக்கப் பட்டுக்கொண்டிரிக்கிறது
அதைக் கொல்ல --எஃப்.எம்---------டி.வி.---------சினிமா-------என்ற ஆங்கிலப்படையோடு--முன்னாள் தமிழர் தளபதிகள்--புறப்பட்டு வருகிறார்கள்--

அம்மா--தமிழே நீ கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டு நான்
சும்மா--இருக்கிறேனே--
முதலில் என்னைக்கொல்--என புறப்படவா?--இல்லை
உன்னைக்கொல்ல துடிப்பவனை--போட்டுத்தள்ள புறப்படவா?
 

--

2 comments:

ecogreenunits said...

yes sir this is a virus from the media,how can we stop it?

எஸ்.ஆர்.சேகர் said...

virus from the rulers who proclaims the champion of Tamils