Pages

Sunday, October 10, 2010

வாயில்லா ஜீவனுக்கு எதிராக பேசாதே


””விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்”----
“’பயிர்களை சூறையாடி ரகளை””
“”வால்பாறையில் வீட்டுக்குள் ஓட்டைபோட்டு அரிசி--பருப்பு களவாடிய யானைகளை வெடிவைத்து விரட்டினர்””

                                                                    யானைகள் நமது எதிரியா?---நம் நிலத்தை அது அபகரிக்கிறதா?-----அல்லது அதன் இருப்பிடமான காடுகளை நாம் அழித்ததால்--வாழ வழி தெரியாமல்---நாட்டுக்குள் புகுந்ததா?

இதில் எது சரி?--எது தவறு?

“”யானைகள் துவம்சம்--அட்டகாசம்----விவசாய நிலங்கள் அழிப்பு-----வாழைத்தோட்டங்கள்--சூறை-------சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனங்கள் இடை மறிப்பு---மற்றும் துரத்தல்””

இப்படி செய்திகள் வெளியிட்டால்--விவசாயிகள் யானைகளை எதிரியாகத்தானே பார்ப்பர்---விளைவு “முள் வேலியில் கரண்ட் பாய்ச்சி யானைகள் கொலை”---பயிர்களில் விஷம் கலந்து யானைகள் கொலை “”என்ற செய்திகள்

இப்படி யானைகளையும் மக்களையும் பிரித்துப் போடுவது ஸன் டி.விக்கு சரியா?

யானைகளின் அடுத்த வில்லன் “இந்தியன் ரயில்வே”
யானைப்பாதைகளில் ரயில்வே லயன்கள்---மலை--காட்டுப்பாதைகளை--பள்ளமான பகுதிகளாக்கி---தண்டவாளங்கள்---இறங்கினால்--யானைகளால் ஏற முடியாது--விளைவு ரயிலில் அடிபட்டு பலி---

ஆண்டுதோறும் ஏளமான யானைகளை கொன்று குவிக்கும் “”யானைகாசுரன்” ரயில்வே  துறைதான்.

மிருகங்கள் விதிமீறுவதில்லை---மனிதனின் எல்லையில் ஊடுருவதில்லை----ஆக்கிரமிப்பதில்லை---

மனிதன் இவற்றையெல்லாம் செய்துவிட்டு---மிருகத்தின் மீது பழிபோடுகிறானே---அவைகள் பேசாது என்பதாலா?

4 comments:

ப.கந்தசாமி said...

//யானைகள் நமது எதிரியா?---நம் நிலத்தை அது அபகரிக்கிறதா?-----அல்லது அதன் இருப்பிடமான காடுகளை நாம் அழித்ததால்--வாழ வழி தெரியாமல்---நாட்டுக்குள் புகுந்ததா?//

நல்ல கேள்வி.

ராஜ நடராஜன் said...

யதார்த்தமாக இதனைப்பார்த்தால் விலங்குகளை வதை செய்வது தடை,கொல்லாமை போன்ற சட்டங்களால் அதன் இனப்பெருக்கம் அதிகரித்திருக்கும் சாத்தியம் இருக்கிறது.வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும் கூட முன்பு புலிகள் அடர்ந்த காடுகளில் மட்டுமே இருந்திருக்கும் வாய்ப்பு இருந்தது.இப்பொழுது மனிதர்கள் வசிக்கும் பகுதியில் கூட நடமாடுகின்றன.

காட்டுக்குள் விருந்து மாதிரி வாழை போன்ற பயிர்கள் ஏக்கர் கணக்கில் இருக்க வாய்ப்பில்லை.நீர் தேடி வரும் போது விவசாய நிலங்கள் விருந்தாகின்றன என்றே சொல்லலாம்.

முன்பு மனிதன் மிருகங்களை அழித்தான்.இப்பொழுது அவற்றின் முறை.

ஞாஞளஙலாழன் said...

நல்ல கருத்து. இந்த உலகம் முழுமையும் மனிதன் தனக்கு என்றே சொந்தம் கொண்டாடுகிறான். நிலவைக் கூட கூறு போட்டு வெளி நாட்டில் விற்க ஆரம்பித்து விட்டார்கள். கொடுமையிலும் கொடுமை.

ஞாஞளஙலாழன் said...

நல்ல கருத்து. இந்த உலகம் முழுமையும் மனிதன் தனக்கு என்றே சொந்தம் கொண்டாடுகிறான். நிலவைக் கூட கூறு போட்டு வெளி நாட்டில் விற்க ஆரம்பித்து விட்டார்கள். கொடுமையிலும் கொடுமை.