Pages

Saturday, December 4, 2010

இன்றே..இப்போதே..இங்கேயே..இனிதே..வாழ்ந்துவிடு…

இன்றே..இப்போதே..இங்கேயே..இனிதே..வாழ்ந்துவிடு…

இது அமங்கலமான வார்த்தையா?..நாளைக்கு நாம் இல்லாமல போய்விடுவோம்?..

நேற்று என்பது “”போயிந்தி”—கான். (GONE)..நாளை என்பது நம் கையில் இல்லை..ஆகவே..இன்றுதான் நமது சொந்தம்..வாழ்ந்துவிடு..என்றுதானே அனேகர் சொல்கிறார்கள்.

LIVE..NOW AND HERE..  இன்றே..இப்போதே..இங்கேயே..வாழ்..வாழ்ந்துவிடு..இதுதான்..உண்மை..நிச்சயம்..நிதர்சனம்..என்கிறார்கள்..மனோதத்துவ நிபுணர்கள்.

சரி..அதை எப்படி வாழ்வது?..எழுந்தது முதல்..இரவு படுக்ககையில் விழுவதுவரை…எந்த திட்டமில்லாமலும்..ஒருசிலர் மட்டும் எதோ திட்டத்துடனும்…ரோபோமாதிரி..கால்நடைகள் மாதிரி..பலவாராக வாழ்கிழ்றோம்.—அல்லது..நாள்—நேரம்..நம்மை..இழுத்துச் செல்கிறது-இதிலே நம் பங்கு என்ன இருக்கிறது?..என்று மனம் சொல்கிறதே..

நேற்றைக்கு சதோஷமாகத்தானே இருந்தது..அது வாழ்க்கையில்லையா?—இன்றைக்கு “”அது “—இதுவரை—இல்லையே..பின் எப்படி வாழ்வது?—வாழ்ந்துவிடு..என்கிறாயே/--

நேற்று போல—”அதுவாக”—வருமா (சந்தோஷம்)—அல்லது..நாமாக “துளாவ வேண்டுமா?”—இல்லை இறைவன் கொண்டு தருவானா?—

நான் சொல்லுகிற “அது “ இப்படி கிடைக்காது..யாரும் தரமுடியாது---ஆண்டவன் உட்பட..
நாமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எங்கிருந்து எடுத்துக்கொள்வது?—இது எங்கே கிடைக்கிறது?—அட்ரஸ் கிடைக்குமா?—

கிடைக்கும்---யார்..” ”இது”—கிடைக்கும் என்று நம்புகிறானோ---அவனுக்குள்ளிருந்து---அவனுடைய மனதுக்குள்ளிருந்து---”இதை”—எடுத்துக்கொள்கிறான் .-உருவாக்குகிறான்—
அவனுடைய முகவரிதான் .-இது கிடைக்குமிடம்---இதன் அட்ரஸ்..

ரொம்ப குழப்பமாய் இருக்கிறதே---இன்றே வாழ்ந்துவிடு என்று சொல்லி---இன்றே கொன்று விடுவீர்கள் பொலிருக்கிறதே?—

தைரியமாய் இருங்கள்—அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது—ஒரு உதாரணத்தை பார்ப்போம்--

 .
ன் நண்பர் அமெரிக்காவில் பி.ஹெச்.டி படித்து வேலைபார்க்கிறார்—ஏன்..அமெரிக்காவில் பி.ஹெச்.டி என்கிறீர்கள்—அது என்ன கொம்பா?—
இங்கே பி.ஹெச்.டி—தெருவுக்குத் தெரு..விக்குது—அங்க அப்பிடி விக்க முடியாது—வாங்கலாம்..படிச்சுமட்டும்—அதனாலதான் அப்படி சொன்னேன்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தோடு—பிள்ளை குட்டிகளோடு இருக்கிறார்.சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்.படித்தால்தான் -வேலை—வாழ்க்கை—என்ற கட்டாயம்.--அதிகட்டாயம்.முனைப்போடு அத்தனையும் செய்து இன்று “”எங்கோ” இருக்கிறார்.

ஆனால் அவரால்—”வடிவேலு ஜோக்குக்குகூட” சிரிக்கமுடியவதில்லை.இயற்கையையும்—இனிமையையும்—ஏன் அவரது வளத்தையும்—வாழ்வையும் கூட—அவரால்..ரசிக்க—ருசிக்க முடிவதில்லை.இது ஏன்?

அந்த பத்தாவது வயதில் தகப்பனை பறிகொடுத்து—வாழ்க்கை என்னும் ஜீவ-மரண போராட்டத்தில்—”கடும் போராளியாகவே”—அவர் வழ்ந்து வந்திருக்கிறார்..இன்று போரில்லை—ஜீவனுண்டு—மரணமில்லை.பின் ஏன் அவரால் வாழ்க்கையை ருசிக்க முடிவதில்லை?

அவர் மனம் பத்து வயதும்—அதற்குப் பின்னிருந்த “”போராளி” காலத்திலேயே இன்னும் இருக்கிறது.இன்று
51 வயதான பின்னும் கூட—பழைய 21 வயதை விட்டு இன்னும் அவர் மனம்--மேலே வந்தபாடில்லை.

நேற்றைய நினைவுகள்---"இன்றை" அழிப்பதற்கு விடலாமா?—நாமே அதற்கு துணை போகலாமா?—

ஆற்றங்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட முடிவு செய்த நரி—அதற்கு ஆட்டுக்குட்டியிடம் காரணம சொன்னதாம்—”அன்று உன் அம்மா நீரைக்கலக்கினாங்க—அதனால அதுக்கு நீதான் இன்னிக்கி தண்டனை பெறணும்”’என்று சொல்லிய மாதிரி….

“”பழைய கிலேசங்களை””---தொடர்ந்து---சுமந்து----புதிய நாட்களில் புகுத்தவேண்டாம்—திணிக்க வேண்டாம்—””

ஆகவே—இன்றே..இப்போதே…இங்கேயே…இனிதாய் வாழ்வோம்—
புதிதாய் பிறந்தது போன்ற—
சுகத்தில்—இன்பத்தில்.

1 comment:

2cool said...

super...nice one:)