Pages

Monday, August 9, 2010

திரிசங்கு சொர்க்கத்தில் --கருணாநிதி

திரிசங்கு சொர்க்கத்தில் --கருணாநிதி
மதுரையில் நடத்திய கக்கன் நூற்றாண்டு விழாவில் காங்கிரஸாருக்கு புதிய தெம்பு பிறந்துள்ளது. “”கோஷ்டி கானம் “”தற்காலிகமாக நிறுத்த்ப்பட்டு “”நவக்கிரக நாயகர்கள் “”ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் ஒன்றாக காட்சி தந்தது --தொண்டர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை அதிகப் படுத்தியுள்ளது கவனிக்கத் தக்கது.

எப்போதும் “”வலியுண்டாக்கும் “”அதிரடிப் பேச்சாளர் ஈரோடு இளங்கோவன் மதுரையில் மிகச் சாதுவாகவே தன் கருத்தை கூறியுங்கூட தாங்க முடியாத முதல்வர் கலைஞர்--”” வலியுறுத்துங்கள்--வலியுண்டாக்காதீர்கள் “--என காங்கிரஸின் அடிப்படை உரிமையைக் கூட அங்கீகரிக்க மறுத்திறுக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக கலைஞரின் பிடியிலிருந்து காங்கிரஸ் நழுவி வருகிறது.இளங்கோவன் மீண்டும் ஆக்ரோஷமாக கலைஞனருக்கு பதில் தந்திருப்பது பலரின் புருவங்களை உயர்தியிருக்கிறது.

வருகின்ற 2011 பொதுத் தேர்தலில் திமுகவின் கூட்டை காங்கிரஸ் விரும்பவில்லை என்பதற்கு அதன் பல “ உள்ளடி வேலைகளை “” அரசியல் நோக்கர்கள் ஆதாரமாக காண்பிக்கிறார்கள்.

சென்னை வழியாக சென்ற ராகுல் காந்தி கலைஞரின் பிறந்த நாளில் கலந்து கொள்ளாதது மட்டுமின்றி வாழ்த்துகூட சொல்லாதது---. தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி தலைவர்களிடம் ராகுல் டெல்லியில் ரகசிய ஆலோசனை நடத்தியது-- விஜயகாந்திடம் கூட்டணி நோக்கோடு நெருக்கமாக இருப்பது--என்பனெல்லாம் இதில் அடங்கும்.

மாவோயிஸ்ட் பிரச்சினையில் உள்துறை மந்திரி சிதம்பரத்தை தாக்கி காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அறிக்கை வெளியிட்டதற்கு சோனியா காந்தியிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. மேலிட ஆசிகளுடன்தான் இந்த அறிக்கை தரப்பட்டுறிக்கிரது என்பதற்கு இது சாக்‌ஷி. இளங்கோவனின் தீவிர ஆவேச பேச்சுக்களும் மத்திய தலைமையால் இதுவரை கண்டிக்கப் படவில்லை .கருணாநிதியின் “”திமுக.காங்கிரஸ் “தலைவர் தங்கபாலு மட்டும் ஏதோ “”மருந்துக்கு “”பொத்தாம் பொதுவாக அறிக்கை விட்டது மட்டுமே நடந்துள்ளது.

செம்மொழி மாநாட்டின் வெற்றிக்குப் பிறகு “”தெனாவெட்டோடு “” இருந்த திமுக தலைமை இப்பபோது அதிச்சியில் உறைந்துள்ளது. காங்கிரஸை விமர்சித்த திமுகவின் “”சாதாரண “” பேச்சாளர் ஒருவரை கட்சிவிட்டு நீக்கி காங்கிரஸ் விஸ்வாசத்தை காண்பிக்க வேண்டிய கட்டாயம் கலைஞருக்கு வந்துள்ளது.

“”சந்தடி சாக்கில் “” மருத்துவர் ஐய்யாவும் காடுவெட்டி குருவை உசுப்பிவிட்டுள்ளார். வன்னியர் இட ஒதுக்கீட்டில் 20 சதம் வேண்டுமென அவரும் இப்போது கலைஞரை தாறுமாறாக பேசிவருகிறார்.

காமன் வெல்த் விளையாட்டு ஊழலோடு ராசாவின் ஊழலையும் சிபிஐயால் தூசி தட்ட காங்கிரஸ் நினைத்திருப்பதாக முதல்வர் அச்சப்படும் நிலையை காங்கிரஸ் உருவாக்கிவருகிறது.

அதனால்தான் “”தெருமுனை கூட்டங்களும்--பொதுக்கூட்டங்களும் “ வருகின்ற 15 நாட்களுக்கு நடத்த முதல்வர் ஆணை இட்டுரிக்கிறார். இவைகளில் திமுக பேச்சாளர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்பதை பொறுத்தே திமுகவின் பலம் வெளிப்படும்.

ஒரு பக்கம் திமுகவோடு ஒட்டப்பார்த்தாலும் அம்மாவோடு ரகசிய உறவை ராமதாஸ் விட்டதாக தெரியவில்லை.

உத்திரப்பிரதேசதில் ஆட்சியை பிடிக்க அதிக கவனம் செலுத்தும் ராகுல் காந்தி --தமிழ்நாட்டிலும் காங்கிரஸின் “”தனி ஆட்சிக்காக “”பல்வேறு பார்மூலாக்களை “” வைத்து செயல்படுவது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

திருப்பூர் கோவிந்தசாமியை “”பிள்ளை பிடிப்பவனைப் போல “”பிடித்துகொண்டுபோன திமுக மீது கம்யூனிஸ்ட்கள் காட்டமாகவே இருக்கின்ற்னர். தா.பாண்டியன் “”அம்மா பாண்டியனாகவே “” தொடர்ந்து இருப்பதும் திமுகவின் போதாத காலம் தான்.

2006 இல் வலுவான கூட்டணி அமைத்த கலைஞர் இன்று “”கூட்டணிக் கட்டு “ கழன்று போவதால் கவலையில் உள்ளார். மீண்டும் ஆட்சியை கைப்பற்றி மகன் கையில் ஒப்படைக்கும் அவர் கனவு தகர்ந்து வருகிறது.

“”கை “”இவரிடமிருந்து கழன்று போகும் நிலையில் கருணாநிதியின் இன்றய நிலை “”திரிசங்கு சொர்க்கம் தான் “””

3 comments:

சசிகுமார் ராமசுவாமி said...

அன்பிற்குரிய சேகர் அண்ணா அவர்களுக்கு.

தங்களுக்கு என்னுடைய மின்னஞ்சல் முகவரியை அளித்தபோது, பத்தோடு பதினொன்று, இதிலென்ன புதிய தகவல் இருந்துவிடப் போகிறது? என்றுதான் நான் எண்ணினேன்.

இப்போது ஒருபாதி மகிழ்ச்சி, ஒருபாதி (என்னைப் பற்றிய) கழிவிரக்கம் ஆம்.!

உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றுமே, சிந்திக்கத் தூண்டுபவை, போற்றத் தக்கவை. பாதுகாக்கத் தக்கவை. இதனால் மகிழ்ச்சி.

நாம் இந்த கோணத்தில் சிந்திக்காமல் போய்விட்டோமே!.. என்ற கழிவிரக்கம்...

கழிவிரக்கம் கிடக்கட்டும் ஒரு பக்கம். மனதிற்கொள்ளவேண்டியது மகிழ்ச்சி மட்டுமே.

பின்குறிப்பு: பதிவேற்றுமுன் எழுத்துப் பிழைகளை மட்டும் சரிபார்த்தல் மிகவும் நன்று.

- சசிகுமார். நரசிம்ம நாயக்கன் பாளையம்.

Thamizhan said...

ராகுலும் காங்கிரசும் திரிசங்கில் தான் உள்ளனர்.சோனியாவைப் பற்றிக் கொடைநாட்டுக் குமரி சொன்னவை மறக்கவோ,மன்னிக்கவோ முடியாதவை.காங்கிரசு தமிழுக்கும்,தமிழினத்திற்கும் செய்துள்ளவை ஈழத் தமிழின அழிப்புக்கு முற்றாகக் காரணமாயிருந்தது தான்.கேப்டனை நம்பியோ,உளறல்கோவன்களையோ நம்பி ஆற்றில் இறங்க முடியுமா?குதிரைகளை நம்பித்தான் சவாரி,பாவம் !மண்குதிரைகள் !

Anonymous said...

In this episode or in any other episode for that matter the real "winner" is the unscrupulous politicians and power brokers.They use the democracy to rape the freedom given by our elders.There are Eloangovans,Ramdosses, Thirumavalavans,Vijaykants and plenty of them use politics for their selfish end.They neither bother about Indians nor Tamils.